நேற்று பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில், கடைசி 3 ஓவர்களில் அதிரடியை தொடங்கிய தினேஷ், 14 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். கார்த்திக் சிக்ஸ், பவுண்டரி அடிக்கும் ஒவ்வொரு முறையும், விராட் கோலி புன்னகையுடன் அவரை பாராட்டினார். இறுதியில் போட்டி முடிந்து, மைதானத்தை விட்டு செல்கையில் தினேஷ் தோள் மீது கை போட்டு நடந்து சென்றார் கோலி.
இங்கிலாந்துக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தினேஷ் கார்த்திக் கேப்டன் விராட் கோலியை நாட்டிங்காமில் பேட்டி எடுத்தார். கார்த்திக் கோலியிடம் பல கடினமான கேள்விகளை முன்வைத்தார். ஸ்கை ஸ்போர்ட்ஸின் சிறப்பு வர்ணனையாளராக களமிறங்கிய தினேஷின் மிக இயல்பான கேள்விகள், இங்கிலாந்து ரசிகர்களின் இதயங்களை வென்றது. அவரை, அந்த சுற்றுப்பயணத்தின் கண்டுபிடிப்பு என நெட்டிஸ்சன்கள் கூறினர். இனி தினேஷ் கார்த்திக் அவ்வளவுதான் கிரிக்கெட் வர்ணனைதான், வீரராகப் பார்க்க முடியாது என்றனர், ஆனால் அதை அவர் முறியடித்துள்ளார்.
நேற்று ஆர்சிபி அணி தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் இருந்த போது 18வது ஓவர் முடிவில் 171/2 என்று இருந்தது. 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் தன் குருநாதர் ஏ.பி.டிவில்லியர்சை நினைத்துக் கொண்டார் போலும். ஒடியன் ஸ்மித் போட்ட முதல் பந்தே சிக்ஸ். ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து கொண்டு பைன்லெக் மேல் சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்து கிளாசிக் புல் ஷாட். பிறகு ஒடியன் தலைக்கு மேல் அவரது ஸ்லோ பந்தை தூக்கி சிக்ஸ் விளாசினார். அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது.
— Live Cricket Master Updater (@MohsinM55415496) March 27, 2022
20வது ஓவரை சந்தீப் சர்மா வீசினார், வைடாக வீசப்பட்ட பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு நன்றாக நகர்ந்து எக்ஸ்ட்ரா கவர் மேல் ஒரே தூக்குத் தூக்கினார் தினேஷ் கார்த்திக். பிறகு மீண்டும் ஆஃப் ஸ்டம்புக்கு வந்த பந்தை ஃபைன் லெக்கில் ரேம்ப் ஷாட் ஆடினார். ஆர்சிபி 200 ரன்களைக் கடந்தது. பிறகு 3 ஸ்டம்ப்களையும் காட்டிக் கொண்டு ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து ஸ்லாக் ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தார். 16 ரன்கள் கடைசி ஓவரில். தினேஷ் கார்த்தில் 14 பந்தில் 32 ரன்கள். 3 பவுண்டரி 3 சிக்சர்கள்.
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ் இல்லாத குறையைப் போக்கினார் தினேஷ் கார்த்திக் நேற்று. அருமையான ஒரு பினிஷிங் ரோல். இவரிடம் இருக்கும் ஷாட் வகைகளில் 50% கூட தோனியிடம் கிடையாது, இவரிடம் இருக்கும் வெரைட்டி தோனியிடம் இருந்தால் நிச்சயம் தோனி நாம் பார்த்ததைவிட பெரிய மேட்ச் வின்னராக இருந்திருப்பார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.