Home /News /sports /

தோனி கேப்டனாக இல்லாத சி.எஸ்.கே: கேப்டன்சியில் தடுமாறும் ஜடேஜா- ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

தோனி கேப்டனாக இல்லாத சி.எஸ்.கே: கேப்டன்சியில் தடுமாறும் ஜடேஜா- ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

ரவிந்திர ஜடேஜா - தோனி

ரவிந்திர ஜடேஜா - தோனி

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இது சென்னை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    நடப்பாண்டு ஐ.பி.எல்.கிரிக்கெட் திருவிழா 15-வது முறையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் என்ற கெளரவத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இதற்கு முன் விளையாடிய 12 தொடர்களிலும் மகேந்திர சிங் தோனியே கேப்டனாக செயல்பட்டு 11 தொடர்களில் பிளே ஆஃப், நான்கு முறை சாம்பியன் என தலைசிறந்த அணியாக சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தியுள்ளார்.

    இந்தநிலையில் நடப்பு தொடரிலிருந்து கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டு, வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் தொடர்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய தோனி விக்கெட்டை பறிகொடுக்காமல் முதல் போட்டியில் அரைசதம், இரண்டாவது போட்டியில் 16 ரன் என ரசிகர்களை திருப்திபடுத்தவும் தவறவில்லை.

    முதல் போட்டியில் அவர் அடித்த அரைசதம் தோல்வியை மறக்கடித்ததாக கூறும் சி.எஸ்.கே. ரசிகர்கள், அத்துடன் கேப்டன் பதவி என்ற அழுத்தம் இல்லாதது அவருடைய பேட்டிங் திறமையை அதிகரித்துள்ளதாகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

    தன்னால் இனி சி.எஸ்.கே அணியில் தொடர முடியாது என தீர்மானித்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டமைக்கவும், அடுத்த கேப்டனை உருவாக்கவும் தான் இந்த முடிவை எடுத்தார் என்பதை ரசிகர்கள் உணர்ந்திருந்தாலும், கடைசியாக தோனி கேப்டனாக விளையாடிவிட்டு விடைபெறலாமே என்ற ஆசையையும் வெளிப்படுத்த தவறவில்லை.

    அதேவேளையில் தோனி அளவிற்கு ஜடேஜாவால் கேப்டனாக செயல்பட முடியவில்லை என்பதும் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

    பந்துவீச்சில் சொதப்பல், எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளரை பயன்படுத்த வேண்டும் என்ற வியூகத்தில் குழப்பம், புதிய கேப்டன் ஜடேஜா மீதான நெருக்கடி என்பதே சி.எஸ்.கே அணியின் அடுத்தடுத்த தோல்விக்கு காரணம் என விமர்ச்சிக்கிறார் கிரிக்கெட் வல்லுநர் கிஷோர்.

    சென்னை- பஞ்சாப் அணி மோதல்: இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன?

    கேப்டனாக தோனி இல்லை என்பதை தாண்டி சி.எஸ்.கே அணிக்கு இந்த தோல்வி தற்காலிகமானது என்றும், இது ஒரு ஆரம்பம் தான் எனவும் ரசிகர்கள் தங்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்கின்றனர். இனி வரக்கூடிய போட்டிகளில் ஜடேஜாவுக்கு பின்னிருந்து தோனி மேஜிக் நிகழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் கடைசி எதிர்பார்ப்பு.
    Published by:Karthick S
    First published:

    Tags: CSK, IPL 2022, MS Dhoni

    அடுத்த செய்தி