Home /News /sports /

சிஎஸ்கே-யின் பிரச்சனையே தோனியை விட்டால் கேப்டன்சிக்கு ஆளில்லை என்பதுதான் - தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்

சிஎஸ்கே-யின் பிரச்சனையே தோனியை விட்டால் கேப்டன்சிக்கு ஆளில்லை என்பதுதான் - தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

தற்போது சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக அடுத்த கேப்டனாக பொறுப்பேற்க யாருமே இல்லை என முன்னாள் ஆஸ்திரேலிய சைனாமேன் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

    தற்போது சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக அடுத்த கேப்டனாக பொறுப்பேற்க யாருமே இல்லை என முன்னாள் ஆஸ்திரேலிய சைனாமேன் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

    அன்று இவர் கேப்டனாக பொறுப்பேற்று ஆடியவுடன் அணியின் நடவடிக்கையே மாறிப்போனது ருதுராஜ் வெளுத்து வாங்கினார், டெவன் கான்வேயை வீழ்த்தவே முடியவில்லை. 202 ரன்களை விளாசியது, அதிர்ஷ்டவசமாக விட்ட கேட்ச்களுக்கும் மட்டமான பவுலிங்குக்கும் தோற்றிருக்க வேண்டியது தப்பிப் பிழைத்தது சிஎஸ்கே, இன்று டுபிளேசிஸ் தலைமை ஆர்சிபிக்கு எதிராக இன்னொரு பெரிய சவால் காத்திருக்கிறது.

    இந்நிலையில் பிராட் ஹாக் யூ டியூப் சேனலில் கூறும்போது, “இந்த ஆண்டு இறுதியில் எம்எஸ் தோனியிடமிருந்து யார் கேப்டன் பொறுப்பைப் பெறப்போகிறார்கள்? இந்த அணியை திறம்பட கேப்டனாக நடத்தக்கூடிய ஒரு வீரரைக்கூட சிஎஸ்கே அணி பட்டியலில் என்னால் பார்க்க முடியவில்லை. அவர்கள் அடுத்த ஆண்டு கேப்டன்சி திறன் கொண்ட ஒரு வீரரைக் கண்டுபிடிக்க ஏலத்திற்குச் செல்ல வேண்டும், இதுவும் கடினமாக இருக்கும், ஏனெனில் அனைத்து சிறந்த இந்திய டி 20 வீரர்களும் ஏற்கனவே பிற அணிகளில் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்” என்றார் பிராட் ஹாக்.

    அதனால் வெளிநாட்டு வீரரைத்தான் கேப்டனாக்க வேண்டும் என்கிறார் பிராட் ஹாக், “சிஎஸ்கே ஒரு சர்வதேச வீரரிடம் செல்ல வேண்டும். சிஎஸ்கே ஏற்கனவே வைத்திருக்கும் சமநிலை மற்றும் கேம் திட்டத்திற்கு பொருந்தக்கூடிய ஒரு வீரரைக் கேப்டனாகக் கண்டுபிடிப்பது கடினம்.” என்கிறார் பிராட் ஹாக்.

    ரெய்னா சின்ன தல அருமையான கேப்டன்சி வீரர், ஆனால் அவரைக் கழற்றி விட்டனர்.  தான் 2022 ஐபிஎல் தொடரில் கேப்டன்சி செய்யப்போவதில்லை எனும்போது ஏன் ரெய்னாவை கழற்றி விட்டார் தோனி? என்ற கேள்வி எழுகிறது.

    சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, சிஎஸ்கே 20 வெற்றிகளையும், பெங்களூர் ஒன்பது வெற்றிகளையும் பெற்றுள்ளது. இன்று இரவு இரு அணிகளும் மோதும்போது விட்டுக்கொடுக்காமல் ஆடினால் இந்தப் போட்டி ஒரு கிரிக்கெட் விருந்தாக இருக்கும். அல்லது விட்டுக்கொடுத்து ஆடினால் அது சுத்த வேஸ்ட் ஆக இருக்கும்..
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dhoni, Raina, Ravindra jadeja

    அடுத்த செய்தி