Home /News /sports /

பாட் கமின்ஸ் இப்படி சாத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை, ஜீரணிக்க முடியவில்லை - ரோஹித் சர்மா புலம்பல்

பாட் கமின்ஸ் இப்படி சாத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை, ஜீரணிக்க முடியவில்லை - ரோஹித் சர்மா புலம்பல்

ரோஹித் ஏமாற்றம்

ரோஹித் ஏமாற்றம்

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான மும்பை இந்தியன்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் மும்பை இந்தியன்ஸ் மூன்று ஆட்டங்களில் மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்தது.

மேலும் படிக்கவும் ...
    புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான மும்பை இந்தியன்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் மும்பை இந்தியன்ஸ் மூன்று ஆட்டங்களில் மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்தது.

    ரோஹித் ஷர்மா தோல்விகளினால் துவண்டு போயுள்ளார். மகிழ்ச்சியாக இல்லை, ஏனெனில் அவர் தோல்விகளுடன் தொடங்குவதை விரும்பவில்லை. தொடரின் ஆரம்பத்தில் தோற்பது என்பது மும்பை இந்தியன்ஸுக்கு ஒரு முக்கிய அடையாளமாக மாறியுள்ளது.

    மற்றவர்களைப் போலவே, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் கம்மின்ஸின் காட்டடியில் திகிலடைந்துதான் போனார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், வெங்கடேஷ் ஐயர் 41 பந்தில் 50 ரன்கள் எடுத்ததன் மூலமும், பாட் கம்மின்ஸ் 15 பந்தில் 56 ரன்கள் எடுத்ததன் மூலமும் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

    இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

    “கம்மின்ஸ் இறங்கி இப்படி விளையாடுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்குரிய பெருமைகளைச் சேர்ப்பிக்க வேண்டும். ஆட்டம் தொடரும் போது ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. அது ஆரம்பத்தில் பந்துகள் கொஞ்சம் நின்று வந்தன, பிறகு மொத்தத்தில் இது ஒரு நல்ல பிட்ச்.

    பேட் மூலம் நாங்கள் சரியாகத் தொடங்கவில்லை, கடைசி 4-5 ஓவர்களில் 70+ ரன்களை எடுப்பது பேட்டிங் யூனிட்டிலிருந்து பெரும் முயற்சியாக இருந்தது. இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கும், குறிப்பாக கடைசி சில ஓவர்களில் மாறியது ஜீரணிக்க முடியாதது. நமக்கு முன்னால் நிறைய கடின உழைப்பு காத்திருக்கிறது.

    நாங்கள் திட்டமிட்டபடி விளையாடவில்லை. 15வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம், பிறகு கமின்ஸ் வந்தார் சாத்தினார். கமின்ஸ் பிரில்லியண்ட். நாங்கள் அதிகமாக ரன்கள் எடுக்கும் போதெல்லாம் எங்கள் கை உயர்ந்திருக்கும். அவர்களது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டோம். ஒரு விக்கெட் அது வெங்கடேஷ் அய்யராக இருக்கலாம் அல்லது பாட் கமின்ஸ் ஆக இருக்கலாம். 3 போட்டிகளிலும் தோல்வி இந்த நிலையில் இருப்போம் என்று எதிர்பார்க்கவும் இல்லை, இதை நான் ஒருபோதும் விரும்புவதும் இல்லை வரவேற்பதும் இல்லை." என்றார் ரோஹித் சர்மா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, KKR, Mumbai Indians, Rohit sharma

    அடுத்த செய்தி