Home /News /sports /

IPL 2022: பாவம் ஜடேஜா! - தோல்வி குறித்து ‘தேய்ந்து’ போன பதில்

IPL 2022: பாவம் ஜடேஜா! - தோல்வி குறித்து ‘தேய்ந்து’ போன பதில்

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டனாக இது ஒரு நல்ல தொடக்கமாக இல்லை, ஏனெனில் சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் கணக்கைத் திறக்கத் தவறிவிட்டது மற்றும் பல போட்டிகளில் மூன்று தோல்விகளுடன் 9 வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2022 தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தீப்பொறி பறக்கும் ஆட்டத்தின் முன் வயதான சிஎஸ்கே அணியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மேலும் படிக்கவும் ...
  ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டனாக இது ஒரு நல்ல தொடக்கமாக இல்லை, ஏனெனில் சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் கணக்கைத் திறக்கத் தவறிவிட்டது மற்றும் பல போட்டிகளில் மூன்று தோல்விகளுடன் 9 வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2022 தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தீப்பொறி பறக்கும் ஆட்டத்தின் முன் வயதான சிஎஸ்கே அணியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

  தோற்றவுடன் என்ன தவறு நடந்தது என்பதில் தோனிக்குள்ள ஒரு பார்வையோ, விராட் கோலிக்கு உள்ள ஒரு ஆழமான கருத்தோ கிரிக்கெட் நுணுக்கமோ, கேப்டன்சி நுட்பமோ ஜடேஜாவுக்கு இல்லை என்று அவர் நேற்று போட்டி முடிந்ததும் அளித்த பேட்டியிலேயே தெரிந்து விட்டது. வழக்கமான நுட்பமற்ற, எந்த ஒரு நுண் அணுகுமுறையும் அற்ற சாதாரணத்துக்கும் கீழான ஒரு பார்வையையே ஜடேஜா கொண்டுள்ளார். கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் தவறான ஆளை தேர்வு செய்து விட்டதோ என்ற ஐயம் ரசிகர்களுக்கு ஏற்படுவது இயற்கையே.

  ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது. இது சென்னை அணியின் 3-வது தோல்வியாகும்.

  நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

  இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து சென்னை அணி கேப்டன் ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

  அதற்கு பதிலளித்த ஜடேஜா, நாங்கள் பவர்-பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். முதல்பந்தில் இருந்தே ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. வலுவாக மீண்டு வர நாங்கள் புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டும்’ என்றார்.

  மேலும், தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து குறைவான ரன்னிலேயே அவுட் ஆவதும், அவரது ஆட்டத்திறமை கவலையளிக்கும் வகையில் உள்ளதா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜடேஜா, கெய்குவாட் மிகச்சிறந்த வீரர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அவருக்கு நாம் உத்வேகம் அளிக்க வேண்டும். அவர் மீண்டும் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்றார்.

  துபே பற்றி கூறுகையில், “அவர் பிரமாதமாக பேட் செய்து வருகிறார், இந்தப் போட்டியில் கலக்கி விட்டார். அவரை இதே மன நிலையில் வைத்திருப்பதுதான் முக்கியம். நாங்கள் நிச்சயம் கடினமாக உழைத்து வலுவாக திரும்ப வருவோம்” என்றார் ஜடேஜா.

  பரிட்சையில் பெயில் ஆகும் சின்னப் பையன்கள் வீட்டில், நான் அடுத்த தடவை பார், எப்படி மார்க் வாங்குகிறேன் பார் என்று கூறுவார், அது சின்னப்பையன்களின் மனநிலைக்கு ஓகே, ஆனால் தோனியின் கேப்டன்சியில் ஆடி, விராட் கோலியின் கேப்டன்சியில் ஆடி, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியிலும் ஆடி ஜடேஜா ஸ்கூல் பையன் போன்று தோல்விக்குப் பிறகு பேசுவது அவர் கேப்டன்சி மெடீரியல் இல்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, IPL 2022, Ravindra jadeja

  அடுத்த செய்தி