Home /News /sports /

பந்துவீச்சில் அசத்திய லக்னோ: பேட்டிங்கில் சொதப்பிய மும்பை- 8-வது போட்டியாக தொடர் தோல்வி

பந்துவீச்சில் அசத்திய லக்னோ: பேட்டிங்கில் சொதப்பிய மும்பை- 8-வது போட்டியாக தொடர் தோல்வி

லக்னோ வீரர்கள்

லக்னோ வீரர்கள்

லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 37-வது போட்டியில் மும்பை அணியும் லக்னோ அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். டிகாக் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து, மணிஷ் பாண்டே களமிறங்கினார். அவரும் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மறுபுறம் ராகுல் அதிரடியாக ஆடினார். ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், குர்ணால் பாண்டிய 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், மறுபுறம் கே.எல்.ராகுல் அதிரடியைக் கைவிடாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். அதிரடியாக ஆடிய அவர் 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 168 ரன்களைக் குவித்தது. மும்பை அணி சார்பில் பொல்லார்டு, ரிலே மீரிடித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனையடுத்து, களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். இந்தத் தொடரின் இருவரது பாட்னர்ஷிப் சிறப்பாக அமையவில்லை. அதுவே இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ப்ரீவிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ரோஹித் சர்மா 31 ரன்களில் குர்ணால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, சூர்யா குமாரும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 11.2 ஓவரில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.

    கே.எல்.ராகுல் அதிரடி சதம்: 168 ரன்கள் குவித்த லக்னோ அணி

    திலக் வர்மா மட்டும் மும்பை அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். 20 ஓவரில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி தொடர்ந்து 8-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி