Home /News /sports /

Rohit Sharma: ஏன் எல்லாம் தலையைத் தொங்கப் போட்டுட்டு இருக்கீங்க?- நிமிர்ந்து நில்லுங்க- வீரர்களுக்கு உணர்வூட்டிய ரோஹித் சர்மா

Rohit Sharma: ஏன் எல்லாம் தலையைத் தொங்கப் போட்டுட்டு இருக்கீங்க?- நிமிர்ந்து நில்லுங்க- வீரர்களுக்கு உணர்வூட்டிய ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சிலபல போட்டிகளை தோற்பது மும்பைக்கு புதிதில்லை என்றாலும் இந்த முறை ஏதோ மும்பை படுதோல்வி அடையும் என்று அனைவருக்கும் பட்சி எடுத்துச் சொல்ல அதே பட்சி ரோஹித் சர்மாவுக்கும் சொல்ல அணி வீரர்களை அழைத்து ஓய்வறையில் உணர்ச்சி ததும்ப, உணர்ச்சியூட்டும் வகையில் பேசியுள்ளார்.

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. அவர்களின் பூஜ்ஜிய புள்ளிகளுடன், புள்ளிகள் அட்டவணையின் கீழ் பாதிக்கு உருட்டித் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அணி வீரர்களை ஒன்று திரட்டி ஓய்வறையில் ஒரு உணர்ச்சித்தூண்டும் pep talk கொடுத்தார் ரோஹித் சர்மா, அவர் பேசியதாவது:

இங்கு தனி நபர்களை நாம் தீவிரமாக குற்றம் சொல்ல முடியாது. நாம் அனைவரும் தான். ஒன்றாக வெல்வோம், ஒன்றாக தோற்கிறோம். நான் இதை விட எளிமையாகச் சொல்ல முடியாது. எனவே, சில நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறோம். நாம் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும், சில நல்ல விஷயங்களைச் செய்துள்ளோம். அந்த சிறிய தருணங்களையும், அந்த அறிகுறியையும் களத்தில் நாம் புரிந்து கொண்டால் நல்லது.

அதாவது இதுதான் அந்த ஓவர், நமக்கு திருப்பு முனை தரும் ஓவர் என்ரு அறிகுறி தெரியும் அந்த ஓவரில் நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம். அந்த சிறிய, சிறிய விஷயங்களை நாம் புரிந்து கொண்டு அதை அழுத்தி, அதை நம் பக்கம் கொண்டு வர வேண்டும். அந்த உத்வேகத்தை நம் பக்கம் கொண்டு வாருங்கள்.

நாம் பீதியடையத் தேவையில்லை. இந்த அறையில் நாம் திறன், ஆற்றல் எல்லாவற்றையும்தான் பேசுகிறோம். ஆனால் வெற்றிக்கான உந்துதல் மற்றும் அந்த தீவிரத்தை நாம் களத்தில் கொண்டு வரும் வரை எதிரணியினர் நமக்கு இந்தா வச்சுக்கோ என்று வெற்றிகளை பரிசளிக்க மாட்டார்கள்.

அவர்கள் நிச்சயமாக நம்மிடமிருந்து வெற்றியைப் பறித்தனர். எதிரணிகளுக்கு எதிராகவும் நாம் அதைச் செய்ய வேண்டும். அந்த முக்கியமான தருணங்களை நாம் கைப்பற்ற வேண்டும், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்த கட்டத்தில் தலையை தொங்கப்போடுவதில் அர்த்தமில்லை, ஏனென்றால் இது இன்னும் ஆரம்ப கட்டம்தான். நாம் விளையாடிய இந்த மூன்று ஆட்டங்களிலும் சில நல்ல குணாதிசயங்களைக் காட்டியுள்ளோம் என்று நான் உணர்கிறேன். யார் 11-க்குள் வந்தாலும் களம் கண்டாலும், யார் களத்துக்குள் சென்றாலும் வரும்போது சேர்ந்துதான் வர வேண்டும்.” அதாவது விக்கெட்டுகளை தாரை வார்க்கக் கூடாது என்கிறார் ரோஹித் சர்மா.



அவ்வளவுதான். தலை நிமிர்ந்து நிற்போம். நாம் தலையைத் தொங்கப்போட்டு கவலைப்பட ஆரம்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையைச் சொன்னால், விஷயங்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

"நாம் களத்திற்கு வெளியே பல விஷயங்களைப் பற்றி பேசலாம், ஆனால் ஒரு குழுவாக நாம் எதைச் சாதிக்க விரும்புகிறோம் என்பதை இங்குதான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மீண்டும், இது பந்துவீச்சு குழுவோ அல்லது பேட்டிங் குழு மட்டுமோ அல்ல, இது நாம் அனைவரும் - இங்கே நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும், ஒன்றிரண்டு பேர் அல்ல. அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதைத்தான் நான் உணர்கிறேன்” என்றார் ரோஹித் சர்மா.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, IPL 2022, Mumbai Indians, Rohit sharma

அடுத்த செய்தி