Home /News /sports /

IPL 2022 KKR vs MI - கொல்கத்தா 42 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தால் நாங்கள் 44 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழப்போம்- மும்பையின் தோல்வி பாலிசி

IPL 2022 KKR vs MI - கொல்கத்தா 42 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தால் நாங்கள் 44 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழப்போம்- மும்பையின் தோல்வி பாலிசி

வெற்றி பெற்ற கொல்கத்தா அணி

வெற்றி பெற்ற கொல்கத்தா அணி

 

மும்பை, டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற டாடா ஐபிஎல் 2022 56வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்து 165/9 என்று ஒரு நிதானமான டார்கெட்டை வைக்க, மும்பை இந்தியன்ஸ் 113 ரன்களுக்குக் காலியானது. மும்பை இந்தியன்ஸ் அணியை 123/2லிருந்து 165/9 ஆக மட்டுப்படுத்தியது பும்ராவின் ஆக்ரோஷா ஷார்ட் பிட்ச் பவுலிங், அதே போல் 69/2லிருந்து 113 ரன்களுக்கு மும்பை ஆல் அவுட் ஆகி தோல்வியடையக் காரணம் கமின்ஸ், ஆந்த்ரே ரஸல் ஆகியோர்களாவார்கள்.

கொத்தாக விக்கெட்டை கொடுப்பதில் நானா நீயா என்று இருந்தது இந்தப் போட்டி. நீ 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கொடுத்தாயல்லவா, நாங்கள் என்ன இளித்த வாயர்களா என்று மும்பை இந்தியன்ஸ் 44 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள், இந்தா வைத்துக்கொள் என்று கூறியது. கொல்கத்தா அணியில் மீண்டும் அழைக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யரின் 24 பந்து 43 ரன்கள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கென்றே பிறந்த நிதிஷ் ராணா 26 பந்தில் 43 அடிக்க, ரஹானே 25 ரன்களையும் ரிங்கு சிங் 19 ரன்களையும் பங்களிப்பு செய்ய கொல்கத்தா 165 ரன்களை எட்டியது, பும்ரா மற்றவர்களையெல்லாம் ஷார்ட் பிட்ச் பவுலிங்குக்கு இரையாக்கினார்.

பும்ரா ஆந்த்ரே ரஸல் (9), நிதிஷ் ராணா (43), ஷெல்டன் ஜாக்சன் (5), பாட் கமின்ஸ் (0), சுனில் நரைன் (0) ஆகியோரை ஷார்ட் பிட்ச் பந்துகளில் வீழ்த்தி 5 விக்கெட்டுகளை வெறும் 10 ரன்களுக்குக் கைப்பற்றி ஐபிஎல் தொடரின் தனது சிறந்த பந்து வீச்சை செய்ததோடு, ஐபிஎல் தொடரின் ஆகச்சிறந்த பந்து வீச்சையும் புரிந்தார். 5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை 9 பந்துகளில் காலி செய்து கொல்கத்தாவின் முதுகெலும்பை உடைத்தார்.

மும்பை பேட் செய்த போது 2 ரன்களில் சவுதீ பந்தில் எட்ஜ் ஆனதா இல்லையா என்று தெரியாமலேயே கடைசி வரைக்கும் தெரியாமலேயே ஆட்டமிழந்தார், களநடுவர் நாட் அவுட் கொடுக்க கொல்கத்தா ரிவியூ செய்தது. அல்ட்ரா எட்ஜ் கிராஃப் எல்லாம் சந்தேகத்தைத்தான் எழுப்பியதே தவிர நிச்சயமாக எதையும் சொல்ல முடியவில்லை, கடைசியில் அவுட் என்றார் 3வது நடுவர். ரோஹித் திருப்தி அடையவில்லை. தான் எட்ஜ் செய்யவில்லை என்று நம்பினார். அதனால் கடும் அதிருப்தியில் வெளியேறினார்.

இஷான் கிஷன் 41 பந்துகளில் அரைசதம் கண்டார். கமின்ஸ் வீசிய உடல் நோக்கிய பவுன்சரில் ரிங்கு சிங்கின் அற்புதமான கேட்சுக்கு வெளியேறினார். மலை மனிதன் டிம் டேவிட் 3 பந்துகளில் 3 பவுண்டரி என்று தொடங்கி பிறகு 6 பந்துகளில் 1 ரன் என்று சுருங்கி வருண் சக்ரவர்த்தியிடம் வெளியேறினார், திலக் வர்மா (6), ரமன் தீப் சிங் (12) டேனியல் சாம்ஸ் (1), முருகன் அஸ்வின் (0) என்று வரிசையாக வெளியேற மும்பை இந்தியன்ஸ் 102/7 என்று ஆனது. குமார் கார்த்திய்கேயா மட்டுமே கீழ் வரிசையில் 3 ரன்கள் எடுத்தார்.

கெய்ரன் பொலார்டு 1 சிக்சருடன் 16 பந்தில் 15 என்று ஆடிக்கொண்டிருந்த போது ஒரு பந்தை கொடியேற்றினார், பந்து செம உயரம் சென்றது, விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன் அந்தக் கேட்சை விட்டார், இதை ஓரளவுக்கு எதிர்பார்த்த வருண் சக்ரவர்த்தி கீழே விழும் பந்தை எடுத்து அதற்குள் ஸ்ட்ரைக்கர் முனையில் ஸ்டம்புக்கு வந்த ஷ்ரேயஸ் அய்யரிடம் அளிக்க அய்யர் ரன் அவுட் செய்தார். பொலார்ட் சில அடிகள் பின் தங்கினார். மிக முக்கியமான ரன் அவுட் இது. மும்பை 113 ரன்களில் 17.3 ஓவர்களில் முடிந்தது. தோற்றாலும் ஆட்ட நாயகன் பும்ரா. கமின்ஸ் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், ரசல் 2 விக்கெட்டுகள். கொல்கத்தா 10 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, IPL 2022, Jasprit bumrah, KKR, Mumbai Indians

அடுத்த செய்தி