IPL 2022 MI vs DC - 2012-க்குப் பிறகு முதல் போட்டியில் வெல்லாத மும்பை - ரோஹித் சர்மா என்ன சொல்கிறார்?
IPL 2022 MI vs DC - 2012-க்குப் பிறகு முதல் போட்டியில் வெல்லாத மும்பை - ரோஹித் சர்மா என்ன சொல்கிறார்?
ஐபிஎல் கோப்பையுடன் ரோஹித் சர்மா
ஐபிஎல் தொடரின் 2வது ஆட்டத்தில் நேற்று மும்பை பிரபர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸை நோகடித்து வெற்றி பெற்றது, அதுவும் வெற்றி பெறுமா என்ற சந்தேக நிலையிலிருந்து லலித் யாதவ், அக்சர் படேல் கூட்டணி வெற்றி பெறச் செய்தது.
ஐபிஎல் தொடரின் 2வது ஆட்டத்தில் நேற்று மும்பை பிரபர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸை நோகடித்து வெற்றி பெற்றது, அதுவும் வெற்றி பெறுமா என்ற சந்தேக நிலையிலிருந்து லலித் யாதவ், அக்சர் படேல் கூட்டணி வெற்றி பெறச் செய்தது. 2012 தொடருக்குப் பிறகே மும்பை இந்தியன்ஸ் எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் முதல் போட்டியில் வென்றதில்லை.
178 ரன்களை விரட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் 9.4 ஓவர்களில் 72/5 என்று டிம் செய்ஃபர்ட் (21), ) மந்தீப் சிங் (0), கேப்டன் ரிஷப் பண்ட் (1), பிரித்வி ஷா (38), ரோவ்மன் போவெல் (0) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தது. பிறகு ஷர்துல் தாக்கூர் மிக அருமையான ஒரு கேமியோவை ஆடினார்,11 பந்துகளில் 22 ரன்களை அவர் விளாசினார், பும்ராவுக்கும் சாத்து விழுந்தது. ஷர்துல் தாக்கூரை ஃபாசில் தம்பி ( 3/35), 6.4 ஓவர்களில் 74 என்று எட்ட முடியாத நிலையில்தான் இருந்தது.
ஆனால் லலித் யாதவ் மெதுவாக தொடங்கி பிறகு வேகம் கூட்டி 38 பந்தில் 48 எடுக்க அக்சர் படேல் 17 பந்தில் 38 ரன்கள் விளாச 10 பந்துகள் மீதம் வைத்தே டெல்லி அணி மும்பையைக் காலி செய்தது.
முன்னதாக, குல்தீப் யாதவ் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தது மும்பை இந்தியன்சை ஒரு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திய பிறகு உலுக்கியது, ஆனால் இஷான் கிஷான் தொடர்ந்து 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்ததை உறுதி செய்தது.
இந்நிலையில் தோல்வி குறித்து மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “நல்ல ஸ்கோர் என்று நினைத்தேன். தொடக்கத்தில் நீங்கள் 170-க்கும் அதிகமான ரன்களை எடுக்கக்கூடிய ஒரு பிட்ச் போல் இது இல்லை. ஆனால் நாங்கள் நடுவில் நன்றாக விளையாடி நன்றாக முடித்தோம். போர்டில் நல்ல ஸ்கோர், நாங்கள் திட்டப்படி பந்து வீசவில்லை என்பதுதான். (2012ல் இருந்து தொடக்க ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறவில்லையா?) நேர்மையாக, அது ஒருபோதும் பேசப்படவில்லை. நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம், அது முதல் ஆட்டமாக இருந்தாலும் சரி, கடைசி ஆட்டமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆட்டத்திலும் முயற்சி செய்து வெற்றி பெற விரும்புகிறோம். ஆனால் திட்டமிட்டபடி நடக்காத சில தவறுகளை களத்தில் செய்தோம். ஆனால் அந்த விஷயங்கள் நடக்கலாம். நாம் அதை குழுவிற்குள் இறுக்கமாக வைத்திருக்க வேண்டும். ஏமாற்றம், ஆனால் அது முடிவல்ல.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.