ஐ.பி.எல் 2022 தொடரின் 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். ப்ளே ஆப்பில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது மும்பை அணி. ஏழாவது ஓவரை போட வந்தார் ஹர்ஷல் பட்டேல். அவருக்கு கை மேல் பலன் கிடைத்தது.
ரோஹித் சர்மா எதிர்கொண்ட ஹர்ஷல் பட்டேலின் முதல் பந்திலேயே அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டத்தை இழந்தார். அப்போது, அவர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்துவந்த டீவால்ட் ப்ரீவிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மறுபுறம் நிதானமாக ஆடிய இஷான் கிஷனும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை அணியில் சூர்யாகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று ஆடினர்.
மோசமான பேட்டிங்: சுமாரான பந்துவீச்சு- நான்காவது போட்டியிலும் சென்னை அணி தோல்வி
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சூர்யாகுமார் மட்டும் கடைசிவரையில் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களைக் குவித்தார். அதன்மூலம், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.