Home /News /sports /

ப்ரிவிஸ் அதிரடி: கடைசிவரை போராடிய சூர்யகுமார்- ஐந்தாவது போட்டியிலும் மும்பை தோல்வி

ப்ரிவிஸ் அதிரடி: கடைசிவரை போராடிய சூர்யகுமார்- ஐந்தாவது போட்டியிலும் மும்பை தோல்வி

பஞ்சாப் வீரர்கள்

பஞ்சாப் வீரர்கள்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

    ஐ.பி.எல் தொடரின் 23-வது போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க அகர்வாலும், ஷிகர் தவனும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் 10 ஓவர் வரையில் விக்கெட் இழப்பின்றி அணியை அழைத்துச் சென்றனர். 32 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார்.

    மறுபுறம் ஷிகர் தவனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். தவனுடன் ஜானி பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோ 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவன் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ஐந்தாவது வீரராக களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அணியினை ஸ்கோர் உயர உதவினார். ஷாருக்கானும் 6 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்கள் அடித்தார். ஜித்தேஷ் சர்மா, ஷாருக்கான் இணை 16 பந்துகளில் 46 ரன்களைக் குவித்தது. மும்பை அணி இறுதி ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு ரன்களை வாரி வழங்கியது. அதன்காரணமாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களைக் குவித்தது. மும்பை அணியின் சார்பில் பசில் தம்பி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். ரோஹித் சர்மா அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினாலும் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 3 ரன்களில் வைபவ் அரோரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4 ஓவரில் 32 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.

    அதனையடுத்து, டீவால் ப்ரிவிஸ், திலக் வர்மா இணை ஜோடி சேர்ந்தது மும்பை அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய ப்ரிவிஸ் 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஓடியன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த திலக்வர்மா 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பொல்லார்டும் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட்டானார்.

    தவன், மயங்க் அதிரடி: 198 ரன்கள் குவித்த பஞ்சாப் கிங்ஸ்

    கடைசியில் சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக நின்று போராடினார். 18 ஓவர் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது போல சிறப்பாக ஆடினார். 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் ஓடியன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை போராடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022, Mumbai Indians

    அடுத்த செய்தி