ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

புதிய சாதனை: விராட் கோலிக்குப் பிறகு தோனி

புதிய சாதனை: விராட் கோலிக்குப் பிறகு தோனி

தோனி-கோலி

தோனி-கோலி

சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை, கோலிக்கு பிறகு டி20யில் இன்னொரு மகுடம்.

 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  விராட் கோலிக்கு பிறகு டி20யில் கேப்டனாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது கேப்டன் என்ற பெருமையை சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் எம்எஸ் தோனி பெற்றார். 2007 முதல் தோனி டி20 ஆடிவருகிறார் அவருக்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து வந்த விராட் கோலி முதலில் கேப்டனாக டி20யில் 6000 ரன்களை எடுக்க  எம்.எஸ்.தோனி நேற்று ஐபிஎல் தொடரில்தான் அந்த சாதனையை நிகழ்த்தினார்.

  டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான சிஎஸ்கேவின் நேற்றைய மோதலின் போது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 18வது ஓவரில் தோனிக்கு இந்த பிரத்யேக கிளப்பில் நுழைவதற்கு நான்கு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. சரியாக சாதித்து முடித்தார்.

  ஷிவம் துபே 19 பந்துகளில் 32 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு தோனி வந்தார், 8 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் எடுத்தார், இதன் மூலம் சூப்பர் கிங்ஸ் 209 என்ற கடினமான இலக்கை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நிர்ணயிக்க டெல்லி 117 ரன்களுக்கு மடிந்து 91 ரன்களில் மிகப்பெரிய தோல்வி தழுவியது.

  ஐபிஎல்லில் 5,000 ரன்களை எட்ட தோனிக்கு இன்னும் 9 ரன்கள் மட்டுமே உள்ளது. இந்த சாதனையை நிகழ்த்தினால் இந்த பிரத்தியேக கிளப்பில் நுழையும் ஏழாவது நபர் ஆவார். இதற்கு முன் 5000 ரன்களை ஐபிஎல் தொடரில் எடுத்தவர்கள் கோலி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர்களாவார்கள்.

  டெவன் கான்வேயின் (49 பந்தில் 87) ஒரு சிறந்த அரை சதம், அதைத் தொடர்ந்து மொயீன் அலி (3/13) ஆகியோரின் அற்புதமான பந்துவீச்சு முயற்சியோடு, டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட்டின் சிலபல குளறுபடியான கத்துக்குட்டி கேப்டன்சியும் கைக்கொடுக்க சிஎஸ்கே அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்புக்கு ஒரு வாய்ப்பு கேட்டுள்ளது. ஆனால் மிக மிகக் கடினம்.

  ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டையெல்லாம் நம்ப முடியாது, எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்க வேண்டியது நன்றாகவே நடக்கும்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, CSK, Dhoni, IPL 2022