Home /News /sports /

IPL 2022 Dhoni- எம்.எஸ்.தோனியின் 5 கிரேட்டஸ்ட் ஐபிஎல் பினிஷ்கள்

IPL 2022 Dhoni- எம்.எஸ்.தோனியின் 5 கிரேட்டஸ்ட் ஐபிஎல் பினிஷ்கள்

தோனி

தோனி

வியாழன் அன்று மும்பையின் DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த CSK vs MI ஆட்டத்தின் இறுதி ஓவரில் சில பரபரப்பான ஹிட்கள் மூலம், MSதோனி அழுத்தத்தின் கீழ் எப்படி கூலாக அடித்து வெற்றி பெற முடியும் என்பதை 40 வயதிலும் தன்னிடம் இருக்கும் திறமையைக் காட்டினார்.

மேலும் படிக்கவும் ...
  வியாழன் அன்று மும்பையின் DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த CSK vs MI ஆட்டத்தின் இறுதி ஓவரில் சில பரபரப்பான ஹிட்கள் மூலம், MSதோனி அழுத்தத்தின் கீழ் எப்படி கூலாக அடித்து வெற்றி பெற முடியும் என்பதை 40 வயதிலும் தன்னிடம் இருக்கும் திறமையைக் காட்டினார்.

  உனாட்கட் இல்லாமல் வேறு பவுலர் இருந்திருந்தால் அவர் இதைச் செய்திருக்க முடியாது என்றாலும் உனாட்கட் இப்படிப் போட்டுக்கொடுக்க பெயர் பெற்றவர் என்றாலும் 40 வயதில் உத்வேகம் காட்டுகிறாரே தோனி அது மிகப்பெரிய விஷயம், விராட் கோலி, ரோஹித் சர்மாவிடம் இது இல்லையே! பல இளம் வீரர்களிடம் கூட இந்த உறுதிப்பாடு, கடப்பாடு இல்லை என்பதுதான் உண்மை.

  இந்நிலையில் தோனியின் 5 கிரேட்டஸ்ட் பினிஷ்களைப் பார்ப்போம்:

  2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக:

  நேற்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 3 ஓவர்களில் 42 ரன்கள் தேவை என்பது பும்ரா 19வது ஓவரில் 11 ரன்கள் கொடுத்த பிறகு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது, ஜெய்தேவ் உனட்கட் வீசிய மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியை அடித்து, வெற்றி ஷாட்டாக பைன்லெக்கில் பந்தை தோனி பிளிக் செய்து பவுண்டரிக்கு அனுப்ப சிஎஸ்கே வெற்றி பெற்றது. மும்பை அணி வீரர்கள் நொறுங்கினர். அவர் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார். இது இந்த சீசனில் CSK இன் இரண்டாவது வெற்றியாகும், மேலும் IPL வரலாற்றில் சீசனின் முதல் ஏழு ஆட்டங்களில் தோல்வியடைந்தது மும்பை இந்தியன்ஸ்.

  Courtesy : @ChennaiIPL


  2016 - கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக:

  ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய தோனி, 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகன் விருதுடன் வெளியேறினார். இறுதி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. அக்சர் படேல் வீசினார், தோனிக்கு ஸ்பின்னரா, அக்சர் படேலை 3 சிக்சர்களை விளாசினார் தோனி. பிறகு ஒரு பவுண்டரி வெற்றியை சீல் செய்தார் தோனி. இத்தனைக்கும் அக்சர் முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை, 2வது பந்து வைடு சென்றாலும் சஹா பந்தை சரியாக கலெக்ட் செய்யாவிட்டாலும் தோனி சிங்கிள் எடுக்கவில்லை. பிறகு முதல் சிக்ஸ் லாங் ஆனுக்கு மேல் பறந்தது. அடுத்த பந்து கவரில் அடித்தாலும் தோனி ஓடவில்லை. அதனால் டாட் பால். அடுத்த பந்து பவுண்டரி. அடுத்த 2 பந்துகளும் சிக்ஸ்.

  2010- கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

  கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், MS தோனி 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து கிரீசில் இருந்தார். எதிர்முனையில் ஹிட்டர் ஆல்பி மோர்கெல் இருந்தார், ஆனால் அந்த தோனிக்கு மோர்கெல் உதவி தேவைப்படவில்லை. இர்பான் பதான் பந்து வீசினார் 16 ரன்கள் தேவை, அவர் ஒரு நல்ல யார்க்கருடன் தொடங்கினார் ஆனால் பந்து பவுண்டரிக்கு பறந்தது. அடுத்ததாக பதான் தனது யார்க்கர் லெந்தைத் தவறவிட்டார், மேலும் லாங் ஆன் ஓவரில் ஒரு பெரிய சிக்ஸருக்கு பந்து தர்மசாலா வானத்தில் உயரமாக உயர்ந்தது. நான்காவது பந்தை லாங்-ஆனில் மீண்டும் அதிகபட்சமாக அடித்த தோனி இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை முடித்தார். 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் மற்றும் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.

  தோனி.


  2013-ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக:

  CSK க்கு இறுதி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது, SRHக்கு எதிராக வெற்றி பெற 160 ரன்களைத் துரத்தியது, 33 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்த தோனிக்கு எதிராக ரன்களை பாதுகாக்கும் பொறுப்பு இளம் ஆஷிஷ் ரெட்டிக்கு வழங்கப்பட்டது. ரெட்டி ஒரு வைட் மூலம் பதற்றத்துடன் தொடங்கினார், அதன் பிறகு மெதுவாக வீசிய பந்தில் தோனியை பீட்டன் செய்தார். 5 பந்தில் 14 தேவை. தோனி அடுத்து 2 பவுண்டரி 1 சிக்சர் என்று விளாசி அபார பினிஷிங்செய்தார். தோனி 37 பந்துகளில் 67 நாட் அவுட். மேன் ஆஃப் த மேட்ச் தோனி.

  2014- மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக:

  தோனி 9 பந்தில் 10 ரன்கள் என்று ஆடிக்கொண்டிருந்தார். 19வது ஓவரை மலிங்கா வீசி 6 ரன்களையே விட்டுக்கொடுத்தார். அதோடு ஜடேஜா, மிதுன் மன்ஹாஸ் விக்கெட்டுகளைக் காலி செய்தார் மலிங்கா. பொலார்டு வீசிய கடைசி ஓவரில் சிக்ஸ், பவுண்டரி அடித்து தோனி வெற்றிபெறச் செய்தார்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Dhoni, IPL 2022, MS Dhoni

  அடுத்த செய்தி