Home /News /sports /

சிஎஸ்கே என்னை ஏலம் எடுத்து விடும் என்று நினைத்தேன்.. 13 ஆண்டுகளாக காத்திருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்

சிஎஸ்கே என்னை ஏலம் எடுத்து விடும் என்று நினைத்தேன்.. 13 ஆண்டுகளாக காத்திருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை தேர்வு செய்யும் என்று நம்பி அதன் அழைப்புக்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணியின் கேப்டனாக ஓரளவுக்கு நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் அங்கு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு பிற்பாடு கேப்டன்சி பறிக்கப்பட்டு பிறகு அங்கு விடுவிக்கப்பட்டார், இப்போது ஆர்சிபி அணி அவரின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுத்துள்ளது. அவரும் இந்த ஐபிஎல் தொடரில் 32(13), 14(7), 44(23), 7(2), 34(14), 66(34), மற்றும் 13(8) என 7 இன்னிங்ஸ்களாக அட்டகாசமான பார்மில் உள்ளார் தினேஷ் கார்த்திக்.

விராட் கோலி இவரைப் பேட்டி காணும்போது வீட்டிலிருந்த படியே ஏ.பி.டிவில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தைப் பார்த்து மகழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார் என்றார் மேலும் தினேஷ் கார்த்திக்கின் சமீபத்திய உழைப்பையும் முக்கியாம்சப்படுத்தினார் விராட் கோலி.

மேலும் இந்திய அணிக்காக ஆடுவது தன் பெரிய விருப்பம் என்பதை விட விருப்பத்தைத் தாண்டிய பெரிய தேட்டம் என்றார் தினேஷ் கார்த்திக், அதாவது,

ஐபிஎல் போட்டியில் விளையாடுவது மிகவும் சிறப்பானது என்றாலும், அதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இந்திய அணிக்காக வரும் 20 ஓவர் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது தன்னுடைய இலக்கு எனக் கூறியுள்ள தினேஷ் கார்த்திக் அதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என பேசியுள்ளார்.

இதைவிட இவர் கூறிய இன்னொரு கருத்து வைரலானது, அதாவது, "2008 ஆம் ஐபிஎல் ஏலத்தின்போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது இருந்த தினேஷ் கார்த்திக், தமிழ்நாட்டிலேயே சிறந்த வீரராக இருக்கிறோம். இந்தியாவுக்காக ஆடும் ஒரே தமிழ்நாட்டு வீரர். அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படியும் ஏலத்தில் எடுத்துவிடும் என நினைத்தேன். ஆரம்பத்தில் எடுக்கவில்லை என்பதால் பின்னர் விளையாட வாய்ப்பு இருக்கும் என நினைத்தேன். அப்படியே 13 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Published by:Muthukumar
First published:

Tags: CSK, Dinesh Karthik, IPL 2022, RCB

அடுத்த செய்தி