IPL 2022- பந்தை இடிபோல் இறக்கும் இடது கை வேகப்புலி மோசின் கான் -வாய்ப்பு கொடுக்காமல் நோக அடித்த மும்பை இந்தியன்ஸ்
IPL 2022- பந்தை இடிபோல் இறக்கும் இடது கை வேகப்புலி மோசின் கான் -வாய்ப்பு கொடுக்காமல் நோக அடித்த மும்பை இந்தியன்ஸ்
மோசின் கான்
நடப்பு ஐபிஎல் 2022 இல் இளம் இடது கை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் போக்கைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் மோசின் கான், ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின் போது பெரிய கட்டத்தில் மிகப்பெரிய அழுத்தத்தின் கீழ் தனது ஈர்க்கக்கூடிய பந்துவீச்சு திறமையையும் உறுதியான மனோபலத்தையும் வெளிப்படுத்தினார்.

மோசின் கான் வயது 23தான். ஆனால் நல்ல ஆக்ரோஷமான ரன் அப்பில் பந்தை விடும்போது முழு தோள்பட்டையையும் பந்தின் மீது இறக்கும் ஒரு அபூர்வமான வேகப்பந்து இடது கை வீச்சாளர் நமக்குக் கிடைத்துள்ளார். இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 2017-18-ல் உ.பி.க்காக அறிமுகமானார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் 8 மேட்ச்களில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதன்பிறகு, மொராதாபாத் வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் மும்பை இந்தியன்ஸிடமிருந்து அழைப்பு பெற்றார், அவர் ஐபிஎல் 2018 க்கு முன்னதாக ரூ. 20 லட்சத்திற்கு அவரைத் தேர்ந்தெடுத்தார், ஆனால் அங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று பவுலரே இல்லாமல் திண்டாடும் போது நேற்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவே பந்தை இடிபோல் இறக்கினார், இடது கை புதிய வேகப்புயல் மோசின் கான்.
லக்னோவும் இவரது ஆற்றலை குறைவாகவே எடைபோட்டது, அதனால்தான் இவரை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கே எடுத்தது. அவர் அணிக்காக நடந்துகொண்டிருக்கும் சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார், ஆனால் நிச்சயமாக அவருக்கு முன்னால் ஒரு பிரகாசமான எதிர்காலம் இருப்பதைக் காட்டியுள்ளார்.
அவர் வேகத்துக்கும் ஹை ஆர்ம் ஆக்ஷனுக்கும் பந்தை லெந்தில் இறக்கினாலே ஆட முடியாது. நேற்று இஷான் கிஷன் இவர் போடும்போது நடுங்கியது நமக்கே தெரிந்தது. ரோஹித் சர்மாவும் தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை, அதாவது இவர் நல்ல லெந்தில் வீசிய பந்தில் அவரே தடுமாறவே செய்தார்.
இத்தனைக்கும் மும்பை இந்தியன்ஸ் நெட்டில் மோசின் கான் வீசியிருப்பார், அப்படியுமே அவரை ஆட திணறுகின்றனர். உம்ரன் மாலிக், மோசின் கான் ஆகியோர் ஆற்றல் மிக்க இந்திய வீச்சாளராக உருவெடுப்பார்கள் என்றே நம்பிக்கை பிறக்கிறது, பிற காரணங்களினால் ஒதுக்காமல் இருந்தால் சரி.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.