Home /News /sports /

IPL 2022 MI vs LSG- நான் உட்பட பொறுப்பற்ற ஷாட்களை ஆடி அவுட் ஆனோம் - ரோஹித் சர்மா வேதனை

IPL 2022 MI vs LSG- நான் உட்பட பொறுப்பற்ற ஷாட்களை ஆடி அவுட் ஆனோம் - ரோஹித் சர்மா வேதனை

இஷான் கிஷன் காமெடி அவுட்

இஷான் கிஷன் காமெடி அவுட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் 2022 ஐபிஎல் கனவு முடிவுக்கு வந்தது, நேற்று லக்னோ அணிக்கு எதிராக பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு 8வது தொடர் தோல்வியுடன் ரோஹித் படைக்கு பிளே ஆஃப் கதவு மூடப்பட்டு விட்டது, இதனையடுத்து தன் வேதனையை ரோஹித் சர்மா பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்கவும் ...

    ஆட்டம் முடிந்தவுடன் அவர் கூறியதாவது:

    பவுலிங் ஓரளவுக்கு நன்றாக செய்தோம் என்றே நினைக்கிறேன். பேட் செய்வதற்கு நல்ல பிட்ச்தான், ஆனால் நாங்கள் சரியாக ஆடவில்லை. இப்படிப்பட்ட இலக்கையெலாம் விரட்டியிருக்க வேண்டாமா? எங்களால் செய்ய முடியவில்லை, காரணம் நான் உட்பட பலரும் பொறுப்பற்ற முறையில் ஷாட்களை ஆடி அவுட் ஆனோம்.

    மிடில் ஓவர்களில் லக்னோ நன்றாக வீசினர், இந்தத் தொடர் முழுதும் நாங்கள் ஒழுங்காக பேட் செய்யவில்லை. ஆனால் எதிரணியினர் நன்றாக பேட் செய்தனர், இது எங்களைக் காயப்படுத்தி விட்டது. டிம் டேவிட் உட்பட பல வீரர்கள் பெயர் விவாதிக்கப்பட்டது, ஏனெனில் இந்தத் தொடரில் நாங்கள் விளையாடுவதைப் பார்க்கும் போது எந்த ஒரு தெரிவையும் விவாதிக்காமல் இருக்க முடியாது.

    பிளேயிங் லெவனில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதே குறிக்கோள். நிறைய மாற்றங்கள் தேவையில்லை ஆனால் விளையாடும் 11 வீரர்களில் வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதே கொள்கை.

    இவ்வாறு கூறினார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா.

    நேற்று 36 ரன்களில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி