IPL 2022 MI vs DC- அவர் என்னையே 4-5 சிக்சர் அடிச்சாரு - ஹர்பஜன் புகழும் அதிரடி நட்சத்திரம்
IPL 2022 MI vs DC- அவர் என்னையே 4-5 சிக்சர் அடிச்சாரு - ஹர்பஜன் புகழும் அதிரடி நட்சத்திரம்
ஹர்பஜன்
இஷான் கிஷன் ஒரு முதிர்ந்த வீரராக வந்துள்ளார். ரோகித் ஷர்மா அவுட் ஆனதும், பேட்டிங்கை தானே எடுத்துக்கொண்டு, ‘கடைசி வரை விளையாட வேண்டும்’ என்று முடிவு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது, காரணம், வெற்றி பெறும் நிலையிலிருந்து கோட்டை விட்டது மும்பை இந்தியன்ஸ், அல்லது லலித் யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் டெல்லி அணியை அபார வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான MI டெல்லி கேப்பிட்டல்ஸிடம் தோல்வியுடன் சீசனைத் தொடங்கினாலும், இஷான் ஒரு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 48 பந்தில் 81 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் எச்சரிக்கை, ஆக்ரோஷன் கலந்த கலவையாக ஆடினார்.
“இஷான் கிஷன் ஒரு முதிர்ந்த வீரராக வந்துள்ளார். ரோகித் ஷர்மா அவுட் ஆனதும், பேட்டிங்கை தானே எடுத்துக்கொண்டு, ‘கடைசி வரை விளையாட வேண்டும்’ என்று முடிவு செய்தார். இந்த ஆட்டத்தின் மூலம், அவர் ஒரு பேட்டராக எவ்வளவு திறமையானவர் என்பதை நிரூபித்துள்ளார்" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான கிரிக்கெட் லைவ்வில் ஹர்பஜன் கூறினார்.
ஹர்பஜன் சிங் மேலும் கூறும்போது, "நான் இந்த பையனின் ரசிகன். ஒருமுறை நான் ஒரு போட்டியில் இவரிடம் பந்து வீசினேன், அவர் எனக்கு எதிராக இரண்டு அல்லது நான்கு சிக்சர்களை அடித்தார். அவர் அப்படி பேட்டிங் செய்வதைப் பார்த்து, அவர் ஒரு அற்புதமான வீரராக இருப்பார் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது, இப்போது அவர் நடுவில் வரும்போதெல்லாம் நான் திரும்பி உட்கார்ந்து அவரது பேட்டிங்கை ரசிக்கிறேன்.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இஷானின் இன்னிங்ஸுக்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், ஏனெனில் அவர்கள் ஏலத்தில் அவரை பெரும் தொகைக்கு எடுத்தனர். ‘எதுவாக இருந்தாலும் இஷானை எடுத்தே தீருவோம்’ என்று உரிமையாளர்கள் திட்டம் தீட்டினர்.அதன் பிறகு என்ன நடந்தது? இஷான் அவர்கள் விரும்பியதைச் செய்தார், அவர் விஷயங்களை அற்புதமாகத் தொடங்குவது மட்டுமல்லாமல் அவர்களுக்காக முடித்தார். இது இஷானின் முதிர்ந்த ஆட்டமாகும் இது” என்றார் ஹர்பஜன்
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.