ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இதுல யார் ஜெயிச்சா என்ன? தோற்றால் என்ன?- மும்பை -சிஎஸ்கே போட்டி குறித்து ரசிகர்கள் மனநிலை

இதுல யார் ஜெயிச்சா என்ன? தோற்றால் என்ன?- மும்பை -சிஎஸ்கே போட்டி குறித்து ரசிகர்கள் மனநிலை

சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் இன்று

சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் இன்று

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முன்பெல்லாம் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி என்றால் முதல் நாள் முதலே ரோஹித் சர்மாவா, தோனியா, பார்த்து விடுவோம், ராயுடுவுக்கு பதில் சொல், இஷான் கிஷனுக்கு பதில் சொல், பொலார்டுக்குப் போட முடியுமா? என்றெல்லாம் டீக்கடைகள் முதல் மக்கள் கூடும் இடங்களில் விவாதம் அரங்கேறும், ஆனால் இந்த முறை சிஎஸ்கே-மும்பை போட்டி என்றால் ஐயைய வேற நல்ல மேட்ச் இல்லையா என்பது போல்தான் ரசிகர்களின் மனோபாவம் உள்ளது.

ஒருபுறம் கிரிக்கெட்டே திகட்டத் திகட்ட ஓவர் டோஸ் ஆகிவிட்டது என்றாலும் இந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் புளித்துப் போன அணிகளாகி விட்டது ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல் தொடரில் இந்த மனோபாவத்தை இரு அணிகளும் மாற்றுவத் கடினம்.

இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் தங்களது நற்பெயரை நிலைநாட்ட தவறி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அந்த அணி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. அவர்கள் 20 ஓவர்களில் 169 ரன்களை பாதுகாக்கத் தவறியதால், குஜராத் டைட்டன்ஸ்  மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிறிஸ் ஜோர்டான் 3.5 ஓவர்களில் 15.1 என்ற எகானமி ரேட்டில் 58 ரன்களை கசியவிட்டதால், இன்றைய போட்டியில் இவருக்குப் பதிலாக டிவைன் பிரிடோரியஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், மும்பை இந்தியன்ஸ், ஆறு ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததால் புள்ளிப்பட்டியலில் இன்னும் கணக்கைத் திறக்கவில்லை. அவர்கள் தங்கள் அணியில் நிறைய மாற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை. பாசில் தம்பிக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி போட்டியில் ஃபேபியன் ஆலன் அணியில் சேர்க்கப்பட்டார்.  ‘என்னத்த மாத்தி’... என்ற மனநிலையில் மும்பையும் உள்ளது.

ஆலன் தனது நான்கு ஓவர்களில் 46 ரன்களை விட்டுக் கொடுத்ததால் இந்த மாற்றம் நல்ல பலனைத் தரவில்லை. MI ஜமைக்கா நட்சத்திரத்திற்கு மற்றொரு வாய்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. இருப்பினும், மற்றொரு அவுட் ஆஃப் ஃபார்ம் பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் ரிலே மெரிடித்துக்கு வழிவிடலாம்.

மும்பை - சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தின் லெவன்:

மும்பை: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன்(விகீ), டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், ஜஸ்பிரித் பும்ரா, ரைலி மெரிடித், முருகன் அஸ்வின்

சென்னை: ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா(கே), டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ

First published:

Tags: CSK, IPL 2022, Mumbai Indians