Home /News /sports /

IPL Auction 2022 FAQs: ஐபிஎல் 2022 மெகா ஏலம்: சைலண்ட் ‘டை’பிரேக்கர் என்றால் என்ன?- ஏலம் குறித்த முழு விவரம்

IPL Auction 2022 FAQs: ஐபிஎல் 2022 மெகா ஏலம்: சைலண்ட் ‘டை’பிரேக்கர் என்றால் என்ன?- ஏலம் குறித்த முழு விவரம்

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் 2022 மேகா ஏலத்துக்கு முன்னதாகஒவ்வொரு அணியிடமும் உள்ள பட்ஜெட் எவ்வளவு, 590 வீரர்கள் மொத்தம் ஏலத்தில் இருக்கிறார்கள் என்றால், முதல் நாளில் 161 விரர்கள்தான் ஏலம் விடப்படுகிறார்கள் ஏன்? மறுநாள் ஆக்சிலரேட்டட் புராசசில் நடைபெறும் என்று கூறப்படுகிறது, இப்படியென்றால் என்ன? சைலண்ட் டை பிரேக்கர் என்றால் என்ன? ஆகிய முழு ஐபிஎல் ஏல விவரங்களை இங்கு காணலாம்:

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
    ஐபிஎல் 2022 மேகா ஏலத்துக்கு முன்னதாகஒவ்வொரு அணியிடமும் உள்ள பட்ஜெட் எவ்வளவு, 590 வீரர்கள் மொத்தம் ஏலத்தில் இருக்கிறார்கள் என்றால், முதல் நாளில் 161 விரர்கள்தான் ஏலம் விடப்படுகிறார்கள் ஏன்? மறுநாள் ஆக்சிலரேட்டட் புராசசில் நடைபெறும் என்று கூறப்படுகிறது, இப்படியென்றால் என்ன? சைலண்ட் டை பிரேக்கர் என்றால் என்ன? ஆகிய முழு ஐபிஎல் ஏல விவரங்களை இங்கு காணலாம்:

    பிப்ரவரி 12ம் தேதி ஐபிஎல் ஏலம் எப்போது தொடங்குகிறது? எங்கு ஏலம்?

    பெங்களூருவில் உள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஏலம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இது 15வது ஐபிஎல் தொடருக்கான ஏலம். 5வது பெரிய ஏலம். 2018-ல் பெரிய ஏலம் நடந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இது லைவ்.

    ஏலத்துக்கு முன் எத்தனை வீரர்கள் அணிகளால் தக்க வைக்கப்பட்டனர்?

    ஏற்கெனவே உள்ள 8 அணி உரிமையகத்தினால் 30 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மற்றும் குஜராத் டைட்டன்ஸ் தலா 3 வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர்.

    அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களும்:

    சிஎஸ்கே அணி ரவிந்திர ஜடேஜாவுக்கு ரூ.16 கோடியும், டோனிக்கு ரூ.12 கோடியும், மொயின் அலிக்கு ரூ.8 கோடியும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.6 கோடியும் செலவிட்டு அவர்களை தக்க வைத்துள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.15 கோடி செலவில் கேப்டன் விராத் கோலி, ரூ.11 கோடி செலவில் க்ளின் மேக்ஸ்வெல் ரூ.7 கோடி செலவி எம்.டி.சிராஜ் ஆகியோரை தக்க வைத்துகொண்டுள்ளது

    பஞ்சாப் அணி இரண்டு உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. ரூ.12 கோடி செலவில் மாயங் அகர்வால், ரூ.4 கோடி செலவில் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.16 கோடி செலவில் கேப்டன் ரோகித் சர்மா, ரூ.12. கோடி செலவில் ஜஸ்பிரித் பும்ரா, ரூ.8 கோடியில் சூர்யகுமார் யாதவ், ரூ.6 கோடியில் பொல்லார்ட் ஆகியோரை தக்க வைத்துள்ளது.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.16 கோடி செலவில் ரிஷப் பண்ட், ரூ.9 கோடி செலவில் அக்சார் படேல், ரூ.7.50 கோடி செலவில் பிரித்வி ஷா, ரூ.6.50 கோடி செலவில் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரை தக்க வைத்துள்ளது

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ரூ.12 கோடி செலவில் ஆந்த்ரே ரசல், ரூ. 8 கோடி செலவில் வருன் சக்கரவர்த்தி, ரூ.8 கோடி செலவில் வெங்கடேஷ் அய்யர், ரூ.6 கோடி செலவில் சுனில் நரேன் ஆகியோரை தக்க வைத்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.14 கோடி செலவில் சஞ்சு சாம்சன், ரூ.10 கோடி செலவில் ஜோஸ் பட்லர், ரூ.4 கோடி செலவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை தக்க வைத்துள்ளது.

    குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், ஷுப்மன் கில்

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய்

    அணிகளிடம் உள்ள தொகை எவ்வளவு?

    வீரர்களை தக்க வைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை போக தற்போது பெங்களூர் அணியிடம் ரூ.57 கோடியும், மும்பை அணியிடம் ரூ.48 கோடியும், பஞ்சாப் அணியிடம் ரூ.72 கோடியும், ஹைதராபாத் அணியிடம் ரூ.68 கோடியும், சிஎஸ்கே அணியிடம் ரூ.48 கோடியும், டெல்லி அணியிடம் ரூ.47.5 கோடியும், கொல்கத்தா அணியிடம் ரூ. 48 கோடியும், ராஜஸ்தான் அணியிடம் ரூ. 62 கோடியும் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ.52 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் ரூ.59 கோடியும் மீதமுள்ளன. இந்த தொகைக்குள்தான் பிற வீரர்களை அந்த அணிகள் வாங்க முடியும்.

    ஏலத்தில் மொத்தம் எத்தனை இந்திய வீரர்கள், அயல்நாட்டு வீரர்கள்?

    மொத்தம் - 590 வீரர்கள், இதில் 370 இந்திய வீரர்கள், 220 அயல்நாட்டு வீரர்கள்.

    ஒவ்வொரு அணியிலும் இருக்க வேண்டிய குறைந்தபட்ச அதிகபட்ச வீரர்கள் எத்தனை பேர்?

    ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள் இருக்க வேண்டும், அதிகபட்சமாக 25 வீரர்கள். ஒவ்வொரு அணியிலும் 8 அயல்நாட்டு வீரர்களை ஸ்குவாடில் வைத்திருக்கலாம். அணியின் மொத்த ஏலத்தொகை ரூ.90 கோடி.

    மார்க்கி செட் என்று அழைக்கப்படும் நட்சத்திர வீரர்கள் யார் யார்?

    அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பாட் கமின்ஸ், குவிண்டன் டி காக், ஷிகர் தவான், ஃபாப் டு பிளெசிஸ், ஷ்ரேயஸ் அய்யர், கேகிசோ ரபாடா, மொகமட் ஷமி, டேவிட் வார்னர்.

    ஏலத்தின் முதல்நாளில் எத்தனை வீரர்கள் ஏலத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்?

    முதல் நாள் ஏலத்தில் அதாவது நாளை, சனிக்கிழமையன்று 161 வீரர்கள் மட்டுமே ஏலம் விடப்படுவார்கள். மீதமுள்ள வீரர்கள் மறுநாள் ஞாயிறன்று முடுக்கி விடப்பட்ட செயல்முறையில் ஏலம் விடப்படுவார்கள்.

    அது என்ன முடுக்கி விடப்பட்ட செயல் முறை (Accelarated Process)?

    ஏலத்தின் மொத்த நடைமுறையையே விரைவு படுத்தி முடிப்பது. முதல் நாள் ஏலம் முடிந்த பிறகு மறு நாள் ஏலம் தொடங்குவதற்குள் உரிமைதாரர்கள் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் போக மீதமுள்ள வீரர்களில் தங்களுக்கு ஆர்வமுள்ள வீரர்கள் பட்டியலைத் தர வேண்டும். இவர்கள் ஞாயிறன்று ஏலம் விடப்படுவார்கள். பிறகு விற்கப்படாத வீரர்கள் ஏலமும் கடைசி வாய்ப்பாக இடம்பெறும்.

    ரைட் டு மேட்ச் முறை இப்போது உண்டா?

    இந்த முறை புதிதாக 2 அணிகள் வந்திருப்பதால் அவர்களும் ஸ்ட்ராங் டீமை எடுக்க வேண்டியுள்ளதால் ரைட் டு மேட்ச் வாய்ப்பு அணிகளுக்கு இந்த முறை கிடையாது.

    குறைந்தபட்ச, அதிகபட்ச ஆதார விலை எத்தனை?

    குறைந்தபட்ச ஆதார விலை ரூ.20 லட்சம் அதிகபட்ச ஆதாரவிலை ரூ.2 கோடி. 10 மார்க்கீ வீரர்களுக்கான ஏலத்தொகை அடிப்படையிலேயே ரூ.2 கோடியிலிருந்துதான் ஆரம்பிக்கும். மொத்தமாக 17 இந்திய வீரர்கள், 31 வெளிநாட்டு வீரர்கள் ரூ.2 கோடி அடிப்படை விலையில் உள்ளனர்.

    ஏலத்தில் இடம்பெற்றுள்ள இளம் மற்றும் வயதான வீரர் யார் யார்?

    ஆப்கானிஸ்தானின் நூர் அகமட் இவருக்கு வயது 17. இவர் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர். வயதான வீரர் இம்ரான் தாஹிர் 43 வயது.

    ஏலத்தில் காணாமல் போன முன்னணி வீரர்கள் யார், ஏன்?

    கிறிஸ் கெய்ல், பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜே ரிச்சர்ட்சன், கைல் ஜேமிசன், சாம் கர்ரன், டான் கிறிஸ்டியன், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், டாம் பான்டன் மற்றும் மாட் ஹென்றி உள்ளிட்ட சில முக்கியப் பெயர்கள் ஏலப் பட்டியலில் இல்லை.

    சைலண்ட் டை பிரேக் என்றால் என்ன?

    2010 முதல் சைலண்ட் டை பிரேக் முறை ஐபிஎல் ஏலத்தில் நடைமுறையில் இருந்தாலும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை. அதாவது ஒரு வீரருக்காக ஒரு அணி உரிமையாளர் ஒரு தொகைக்கு ஏலம் கேட்கும் பட்சத்தில் அவரது பர்சும் அதோடு காலியாகும் தருணமாக இருக்கும் போது இன்னொரு உரிமையாளரும் அதே தொகைக்கு அதே வீரருக்கு போட்டி போட்டால் அங்கு சைலண்ட் டை பிரேக் முறை பயன்படுத்தப்படும். அப்போது அணி உரிமையாளர்கள் அந்த குறிப்பிட்ட வீரருக்கு தாங்கள் மேலும் இத்தனை தொகை கொடுக்க முடியும் என்று பிசிசிஐக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த தனிப்பட்ட தொகை பிசிசிஐக்கு உரிமையாளர்கள் தர வேண்டியதாகும். ஆனால் இந்தத் தொகை அவர்கள் பர்சிலிருந்து கழிக்கப்பட மாட்டாது. டை பிரேக் தொகைக்கு வரம்பு கிடையாது. இதிலும் டை ஆனால் மீண்டும் இதே நடைமுறை தொடரும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, IPL Auction 2021

    அடுத்த செய்தி