Home /News /sports /

கே.எல்.ராகுல் கேப்டனான ஐபிஎல் புது அணியின் பெயர் அறிவிப்பு

கே.எல்.ராகுல் கேப்டனான ஐபிஎல் புது அணியின் பெயர் அறிவிப்பு

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

இந்த ஆண்டில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோ, ஆமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன இதில் லக்னோ அணி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடம் சமூக வலைதளம் மூலம் கருத்து கேட்டு பெயரை தேர்வு செய்ததாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    இந்த ஆண்டில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோ, ஆமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன இதில் லக்னோ அணி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடம் சமூக வலைதளம் மூலம் கருத்து கேட்டு பெயரை தேர்வு செய்ததாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    லக்னோ அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் இருப்பார் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் லக்னோ அணியின் பெயரை அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. லக்னோ அணி ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயெங்கா அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் என்று அறிவித்தார். அவர் அறிவித்த முகூர்த்தம் ராகுல் ஒருநாள் தொடரை இழந்தார். கே.எல்.ராகுலுக்கு லக்னோ அணி ரூ.17 கோடி கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட 2வது வீரர் கே.எல்.ராகுல். இவர்கள்தான் முன்பு புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரையும் முன் கூட்டியே லக்னோ அணி எடுத்துள்ளது. ஸ்டாய்னிஸ் ரூ.9.2 கோடிக்கும் ரவி பிஷ்னோய் ரூ.4 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர், இதனையடுத்து லக்னோ அணியின் உச்சபட்ச ஏலத்தொகையான ரூ.90 கோடியிலிருந்து ரூ.30 கோடி ஏற்கெனவே செலவிடப்பட்டு விட்டது.

    எனவே பிப்ரவரி 12-13 தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.60 கோடி மட்டுமே லக்னோ அணியினால் செலவிட முடியும். ஐபிஎல் 2022 தொடர் மார்ச் 27ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில்தான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் தென் ஆப்பிரிக்கா, அல்லது இலங்கைக்குச் செல்லலாம்.

    மற்றொரு புதிய அணியான அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷீத் கானை ரூ15 கோடிக்கும், ஷுப்மன் கில்லை ரூ.8 கோடிக்கும் வாங்கியுள்ளது. ஏலத்தில் அகமதாபாத் அணிக்கு கையில் இருப்பது ரூ58 கோடி மட்டுமே.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Kl rahul

    அடுத்த செய்தி