டீமுக்கு ஒரு நல்ல பேரா சொல்லுங்க- ரசிகர்களிடம் கேட்ட ஐபிஎல் அணி
டீமுக்கு ஒரு நல்ல பேரா சொல்லுங்க- ரசிகர்களிடம் கேட்ட ஐபிஎல் அணி
ஐபிஎல்
ஐபிஎல் 2022 தொடருக்காக 2 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன, ஒன்று அகமதாபாத், மற்றொன்று லக்னோ. இதில் லக்னோ அணி தன் சமூக ஊடகக் கணக்கைத் தொடங்கி முதலில் அணிக்கு ஒரு நல்ல பெயராக தேர்வு செய்து கொடுங்கள் என்று ரசிகர்களிடமே கோரிக்கை வைத்துள்ளது.
ஐபிஎல் 2022 தொடருக்காக 2 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன, ஒன்று அகமதாபாத், மற்றொன்று லக்னோ. இதில் லக்னோ அணி தன் சமூக ஊடகக் கணக்கைத் தொடங்கி முதலில் அணிக்கு ஒரு நல்ல பெயராக தேர்வு செய்து கொடுங்கள் என்று ரசிகர்களிடமே கோரிக்கை வைத்துள்ளது.
ஜிம்பாப்வே முன்னாள் கேப்டனும் இங்கிலாந்தின் முன்னாள் பேட்டிங் ஆலோசகருமான ஆண்டி பிளவர் லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கவுதம் கம்பீர் அணியின் அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் மெகா ஏலத்துக்கு முன்பாக 3 வீரர்களை முதலிலேயே ஏலம் எடுக்கும் பேச்சு வார்த்தையில் உள்ளது.
கே.எல்.ராகுல் பின்னால் அலைவதாக செய்திகள் எழுந்துள்ளன, இதனையடுத்து ராகுல் மீது பஞ்சாப் கிங்ஸ் நடவடிக்கை கோரியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆர்பி- சஞ்சிவ் கோயெங்கா குழுமமான லக்னோ அணி ரூ.7,909 கோடிக்கு லக்னோ அணிக்காக பிசிசிஐ-க்கு கொடுத்துள்ளது. அடிப்படை விலையை ரூ.2000 கோடியாக நிர்ணயித்தது பிசிசிஐ. இவர்கள்தான் 2016-17-ல் புனே அணியை வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் என்று பெயர் இருந்தது. தோனி தலைமையில் இறுதிக்குள் நுழைந்தது ஆனால் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வி தழுவியது.
இந்நிலையில் லக்னோ அணிக்கு அணி உரிமையாளர்கள் இன்னமும் பொருத்தமான பெயரை தேர்வு செய்யவில்லை. தன் வருகையை சமூக ஊடகத்தில் அறிவித்த லக்னோ அணி இப்போது அணிக்கு பொருத்தமான பேரை ரசிகர்களே தேர்வு செய்து தருமாறு கோரியுள்ளது. நல்ல பெயரைத் தேர்வு செய்து அதையே அணிக்கு வைக்கவிருப்பதாகவும் ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளது லக்னோ.
IPL ke इतिहास mein pehli baar, team ka naam rakhenge आप। 🎉👏🏼
— Official Lucknow IPL Team (@TeamLucknowIPL) January 4, 2022
லக்னோ ஸ்டால்வார்ட்ஸ். லக்னோ கார்டியன்ஸ், லக்னோ லயன்ஸ் உள்ளிட்ட சில பெயர்கள் இதுவரை ரசிகர்களிடமிருந்து வந்துள்ளன, மேலும் வந்து கொண்டும் இருக்கின்றன.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.