Home /News /sports /

பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத்: 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத்: 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

லக்னோ வீரர்கள்

லக்னோ வீரர்கள்

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் தொடரின் 12-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர். டி காக் ஒரு ரன்னிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஈவின் லீவிஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டேவும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடிவந்தார்.

    லக்னோ அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, கே.எல்.ராகுலுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமா ஆடி ரன்களைக் குவித்தது. சிறப்பாக ஆடிய தீபக் ஹூடா 33 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோமேரியோ ஷெப்பர்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடி வந்த கே.எல்.ராகுலும் 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களைக் குவித்தது.

    ஹைதராபாத் அணி சார்பில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ரோமேரியோ ஷெப்பர்டு தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    கே.எல்.ராகுல், தீபக் ஹூடா பொறுப்பான ஆட்டம்- 169 ரன்கள் குவித்த லக்னோ அணி

    எய்டன் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ராகுல் திரிபாதி மட்டும் நிதானமாக ஆடிவந்தார். திரிபாதியும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் மட்டும் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி