Home /News /sports /

LSG vs KKR-இந்த மாதிரிப் போட்டிகளுக்காகவே எனக்கு கூடுதல் சம்பளம் தர வேண்டும்- கே.எல்.ராகுல்

LSG vs KKR-இந்த மாதிரிப் போட்டிகளுக்காகவே எனக்கு கூடுதல் சம்பளம் தர வேண்டும்- கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

ஐபிஎல் 2022 அறிமுக சீசனிலேயே லக்னோ அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு வழிநடத்திய வெற்றிகர கேப்டன் கே.எல்.ராகுல், இந்திய கேப்டன் கோலி சாதிக்காதை சாதித்து விட்டார். நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக கிரேட் எஸ்கேப் ஆனதில் மகிழ்ச்சியடைந்த கேப்டன் ராகுல் மட்டுமே.

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் 2022 அறிமுக சீசனிலேயே லக்னோ அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு வழிநடத்திய வெற்றிகர கேப்டன் கே.எல்.ராகுல், இந்திய கேப்டன் கோலி சாதிக்காதை சாதித்து விட்டார். நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக கிரேட் எஸ்கேப் ஆனதில் மகிழ்ச்சியடைந்த கேப்டன் ராகுல் மட்டுமே.

    முதலில் பேட் செய்து டி காக் 70 பந்துகளில் 10 சிக்ஸ், 10 பவுண்டரிகளுடன் 140 விளாச, ராகுல் 68 நாட் அவுட் ஆக நிற்க 210/0 என்று சாதனை ஸ்கோரை நோலாசில் எட்டியது, பதிலுக்கு கொல்கத்தா 208 ரன்கள் வரை வந்து அச்சுறுத்தி தோல்வி கண்டது.

    இந்தப் போட்டியில் பெற்ற வெற்றி குறித்து கே.எல்.ராகுல் போட்டி முடிந்தவுடன் கூறும்போது, “இது போன்ற போட்டிகளுக்காக எனக்கு இன்னும் கூடுதல் சம்பளம் தர வேண்டும். இப்படிப்பட்ட போட்டிகளை இந்த சீசனில் இழந்தோம். கடைசி பந்து வரை விறுவிறுப்பாகச் செல்லும் போட்டிகள் குறைவு. சில போட்டிகள் கடைசி ஓவருக்குச் சென்றுள்ளது, ஆனால் கடைசி பந்து வரை த்ரில் என்றால் இந்தப் போட்டிதான்.

    வெற்றி அணியாக முடிந்ததில் மகிழ்ச்சி, எளிதாக தோற்றிருப்போம், நடுவில் மோசமான கிரிக்கெட் ஆடிவிட்டோம் என்ற மனவருத்தத்துடன் சென்றிருப்போம்.சீசனின் கடைசி லீக் போட்டியை இம்மாதிரி முடித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

    மோசின் கான் இந்த சீசனில் எங்களுக்காக தனித்துவமாக வீசுகிறார். அவரிடம் திறமைகள் இருப்பது முக்கியமல்ல அதை சாமர்த்தியமாகவும் புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம். இந்திய அணியில் விரைவில் அவர் இடம்பெறுவார் என்று நினைக்கிறேன். இந்திய அணி எப்போதும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை நாடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இரு அணிகளும் பிரில்லியண்ட் ஆக ஆடியதற்கு இரு அணிகளுக்குமே பெருமை சேரும். நாங்கள் பதற்றமடையவில்லை என்று கூற முடியாது, ஏனெனில் 2 பந்து 3 ரன் தேவை என்று இருந்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் பிரில்லியண்ட்.

    கொல்கத்தா நிச்சயமாக எங்கள் மீது பாய்வார்கள் என்று தெரியும். ஐபிஎல் தொடரின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது என்பது எங்களுக்கு கற்றுக் கொள்ள மேலும் வாய்ப்பளிக்கும். இது போன்ற வெற்றிகள் அணியில் பிணைப்பை வலுப்படுத்தும், நம்பிக்கையை வளர்க்கும்.” என்றார் கே.எல்.ராகுல்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, KKR, Kl rahul, Lucknow Super Giants

    அடுத்த செய்தி