ஐபிஎல் 2022 தொடர்
சென்னையில் ஏப்ரல் 2ம் தேதி தொடங்கலாம் என்று தெரியவந்துள்ளது. அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் தாண்டி நடைபெறும் என்று தெரிகிறது.
இன்னும் ஐபிஎல் 2022-க்கான அட்டவணை தயாராகவில்லை என்றாலும் பிசிசிஐ அணிகளுக்கு இந்தத் தகவலை தெரியப்படுத்தியுள்ளதாக ஆங்கில கிரிக்கெட் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு புதிய அணிகள் வந்திருப்பதால் ஐபிஎல் தொடர் வழக்கமாக 2 மாத அளவு நடைபெறுவது 60 நாட்களையும் தாண்டிச் செல்லும் என்று தெரிகிறது. இறுதிப் போட்டி ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது. தற்போதைய வடிவத்தின் படி ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆடும், 7 போட்டிகள் சொந்த மண்ணில் 7 போட்டிகள் வெளி மண்ணில் ஆட வேண்டும்.
ஐபிஎல் 2021 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளதால் சென்னையில் முதல் போட்டி நடைபெறும். எதிரணி வழக்கம் போல் மும்பை இந்தியன்ஸ் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் 2020 முழுதும் யுஏஇயில் நடைபெற, ஐபிஎல் 2021 தொடர் பாதி இந்தியாவிலும் பாதி யுஏஇயிலும் நடைபெற்று வருகிறது. 2022 சீசன் முழுதும் இந்தியாவில் நடைபெறும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதற்கான மெகா வீரர்கள் ஏலம் டிசம்பரில் நடைபெறும் என்று தெரிகிறது.
சமீபத்தில் சென்னை அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது சிஎஸ்கே வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். அதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 7-ம் நெம்பர் பொறித்த ஜெர்சியை தோனி வழங்கினார்.
அப்போது தோனி கூறும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து சென்னை மீதான உறவு தொடங்கியது. சென்னையில் தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்து உள்ளனர். என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் தான் என்றுள்ளார். இதன் மூலம் அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.