Home /News /sports /

பாட் கம்மின்ஸ் சூறாவளி ஆட்டம்- மும்பையை எளிதாக வீழ்த்திய கொல்கத்தா அணி

பாட் கம்மின்ஸ் சூறாவளி ஆட்டம்- மும்பையை எளிதாக வீழ்த்திய கொல்கத்தா அணி

பாட் கம்மின்ஸ்

பாட் கம்மின்ஸ்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 14-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சைத்தேர்வு செய்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இஷான் கிஷனும், ரோஹித் சர்மாவும் தொடக்கம் மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர். 12 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் தடுமாறினார்.

    12 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷனும் 21 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் டீவால்ட் ப்ரிவிஸ் அதிரடியாக ஆடி ஓரளவு ரன்களை எடுத்தார். அவர், 19 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வருன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 11 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.

    அப்போது ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் களமிறங்கிய கைரன் பொல்லார்டு 5 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபுறம் 38 ரன்களுடன் திலக் வர்மா களத்தில் இருந்தார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களைக் குவித்துள்ளது. கொல்கத்தா அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அதனையடுத்து, கொல்கத்தா அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக அஜிங்கே ரஹானே, வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். ரஹானே 11 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் 10 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் நிதானமாக ஆடிவந்தார். அடுத்து களமிறங்கிய அன்ட்ரே ரஸல்லும் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, வந்தார் பாட் கம்மின்ஸ். இந்த ஐ.பி.எல் தொடர் பார்க்காத சூறாவளி ஆட்டத்தை நிகழ்த்திக் காட்டினார். மும்பை அணி வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

    பந்துவீச்சில் அசத்திய கொல்கத்தா: போராடி 161 ரன்கள் குவித்த மும்பை அணி

    சூறாவளி ஆட்டம் ஆடிய அவர், 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களைக் குவித்தார். ஐ.பி.எல் தொடரில் மிக வேகமாக அடிக்கப்பட்ட அரைசதத்தில் கே.எல்.ராகுலுடன் பகிர்ந்துகொண்டார். அடுத்து எதிர்கொண்ட பந்தில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். மொத்தம் 15 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களைக் குவித்து கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுபுறம் 41 பந்துகளில் 50 ரன்களுடன் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் இருந்தார். 16 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்து கொல்கத்தா அணி வெற்றியை உறுதி செய்தது.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி