IPL 2022- ‘செஞ்சுரி’ அடிக்காமலேயே ‘செஞ்சுரி’ அடித்த விராட் கோலி!
IPL 2022- ‘செஞ்சுரி’ அடிக்காமலேயே ‘செஞ்சுரி’ அடித்த விராட் கோலி!
கோலி அவுட்
கோலி எப்போது கடைசியாக சதமடித்தார்? அதுவே மறந்து போகும் அளவுக்கு அந்தச் சதம் ‘பொய்யாய் பழங்கதையாய் போனதுவே’!. 2019-ல் வங்கதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்ததே கோலியின் கடைசி சதம்.
கோலி எப்போது கடைசியாக சதமடித்தார்? அதுவே மறந்து போகும் அளவுக்கு அந்தச் சதம் ‘பொய்யாய் பழங்கதையாய் போனதுவே’!. 2019-ல் வங்கதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்ததே கோலியின் கடைசி சதம்.
அந்த வங்கதேச சதத்துக்குப் பிறகு விராட் கோலி 17 டெஸ்ட், 21 ஒருநாள் போட்டிகள், 25 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார், 37 ஐபிஎல் போட்டிகளிலும் ஆடியுள்ளார், ஆனால் சதம் வரவில்லை, ஆனால் வேறொரு சதம் வந்தது, அது எப்படியென்றால், கோலி சதம் எடுக்காமல் சதப் போட்டிகள் ஆகிவிட்டது, ஆம்! 100 போட்டிகளாக கோலி சதம் எடுக்கவில்லை, இது எப்படி!! இப்படி ஒரு வித்தியாசமான சதத்தை எடுத்த ஒரே வீரராக கோலி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்திக்கலாம்!! அதாவது சதமே எடுக்காமல் 100 போட்டிகள் ஆடிவிட்டார். எப்படி!! இதுவும் ஒரு சதம்தானே, வித்தியாசமான சதம்.
வந்தார், கண்டார், வென்றார் என்று மாவீரன் ஜூலியஸ் சீசரை சொல்வார்கள், ஆனால் இந்த மாவீரன் விராட் கோலி வந்தார் வந்த சுவடு தெரியாமல் முதல் பந்திலேயே சென்றார், கோல்டன் டக்.
ஆம்! லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நல்ல டெஸ்ட் மேட்ச் பவுலிங் பிட்சில் துஷ்யந்த சமீராவின் அருமையான பந்தை உடலுக்கு தொலைவாக ஆடி கேட்ச் ஆகி வெளியேறினார், முகத்தில் ஒரு வறண்ட புன்னகை, அதாவது என் தப்பு அல்ல நேரம் சரியில்லை என்பது போன்ற, விதியை மதியால் வெல்ல முடியாமல் விதியை நொந்து கொண்ட ஒரு வறண்ட புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்தது.
கடினமான லெந்தில் பந்தை பிட்ச் செய்த சமீரா லேசாக வெளியே எடுத்தார். ஆனால் உடலிலிருந்து தள்ளி ஆடியதால் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார், அதுவும் கோல்டன் டக். இந்த ஐபிஎல் தொடரில் 119 ரன்களை 19.83 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்யும் போது கோலி தானாகவே உடல் நலமில்லை என்று ஒதுங்கிக் கொள்வது அவரது பெயருக்கு நல்லது, இல்லையெனில் நிச்சயம் அவர் பெயர் கெட்டு விடும், வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்வார்.
அணித்தேர்வுக்குழுவுக்கும் பெரிய நெருக்கடி, இப்படி மோசமாக ஆடுபவரை எப்படி தேர்வு செய்ய முடியும்? பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் போது கோலியை அணியில் தேர்வு செய்தால் அது பெரிய சர்ச்சையில் போய் முடியும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.