நேற்றைய ஐபிஎல் 2022 எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்விக்கும், பெங்களூரு வெற்றிக்கும் உள்ள வித்தியாசம் ரஜத் படிதாரின் சதம், மாறாக கே.எல்.ராகுல் பவர் ப்ளேவுக்குப் பிறகு பாரம்பரிய கிரிக்கெட் முறையைக் கடைப்பிடித்ததே தோல்விக்குக் காரணம் என்று டேனியல் வெட்டோரி, சஞ்சய் மஞ்சுரேக்கர் போன்றோர் கூறுகின்றனர்.
படிதார் 49 பந்துகளில் மோசின் கானை புல்ஷாட்டில் சிக்ஸ் அடித்து சதம் அடிக்க, இங்கு ராகுல் 49வது பந்தில் சிக்சர் அடித்தார் ஆனால் 64 ரன்களில் தான் இருந்தார். இது மிகப்பெரிய வித்தியாசம்.
பவர் ப்ளே முடிந்து ராகுல் அடுத்த 7 ஓவர்களில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்தார், இதுதான் தோல்விக்குக் காரணம். கே.எல்.ராகுல் இதனை ஒப்புக் கொள்கிறார், “ஆம், இப்போது அப்படித்தான் உணர்கிறேன். மிடில் ஓவர்களில் இரண்டு பெரிய ஷாட்களையாவது ஆடியிருக்க வேண்டும். அது எங்களை வெற்றிக்கு இட்டுச் சென்றிருக்கும்.
நாங்கள் அந்த சிக்சர்களையும் பவுண்டரிகளியும் முயற்சி செய்யவில்லை என்பதில்லை, அவர்கள் மிடில் ஓவர்களை டைட்டாக வீசினர். ஹர்ஷல் படேலின் 2 ஓவர்கள் எங்களை பின்னுக்குத் தள்ளியது.அவர் 2 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். அவர் வேகத்தை நன்றாக மாற்றுகிறார். கூட்டுகிறார், குறைக்கிறார்.களவியூகத்துக்குத் தக்கவாறு வீசுகிறார். அந்த இடத்தில் தான் கொஞ்சம் பின்னடைவு கண்டோம்” என்றார் ராகுல்.
சஞ்சய் மஞ்சுரேக்கரும் இதே கருத்தை எதிரொலித்து, “கே.எல்.ராகுலுக்கு மிடில் ஓவர்களிலும் அடிக்கும் அபாரத் திறமை இருக்கிறது, சிராஜை தூக்கி அடித்த 2 சிக்சர் 1 பவுண்டரி பிறகு ஹேசில்வுட்டை அடித்தது அவரது திறமைக்கு எடுத்துக் காட்டு. அவர் கடைசி வரை பேட் செய்ய விரும்புகிறார், இது அவரது மன நிலையில் வேர் விட்டுள்ளது.
மாறாக அவர் இன்னும் விரைவு கதியில் ரன்களை எடுத்தால் கடைசி வரை நிற்க வேண்டிய தேவை கூட இருக்காது. அதனால் நான் அவர் பயிற்சியாளராக இருந்தால் நிச்சயம் அவரை விரைவுகதியில் பேட் செய் என்பேன், அதிக ஓவர்கள் நிற்க வேண்டியதில்லை குறைந்த ஓவர் அதிக ரன்கள்தான் தேவை என்று கூறுவேன்” என்றார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2022, Kl rahul, Lucknow Super Giants