Home /News /sports /

IPL 2022 KKR vs RCB-நாங்க அடிக்கிறா மாதிரி அடிப்போம் ஆனா அவுட் ஆகிடுவோம், விக்கெட் எடுப்போம் ஆனா தோத்துருவோம்- கொல்கத்தாவின் மைண்ட் வாய்ஸ்

IPL 2022 KKR vs RCB-நாங்க அடிக்கிறா மாதிரி அடிப்போம் ஆனா அவுட் ஆகிடுவோம், விக்கெட் எடுப்போம் ஆனா தோத்துருவோம்- கொல்கத்தாவின் மைண்ட் வாய்ஸ்

கேகேஆர் தோல்விக்கதை

கேகேஆர் தோல்விக்கதை

நேற்று மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 தொடரின் 6வது டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பெங்களூரு போராடி வெற்றி கண்டது என்றுதான் பலரும் கூறுவார்கள், ஆனால் ஏற்கெனவே பெங்களூருவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்பது கொல்கத்தாவின் பொறுப்பற்ற பேட்டிங்கிலேயே தெரிந்தது.

மேலும் படிக்கவும் ...
  நேற்று மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 தொடரின் 6வது டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பெங்களூரு போராடி வெற்றி கண்டது என்றுதான் பலரும் கூறுவார்கள், ஆனால் ஏற்கெனவே பெங்களூருவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்பது கொல்கத்தாவின் பொறுப்பற்ற பேட்டிங்கிலேயே தெரிந்தது.

  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பனிப்பொழிவை கணக்கிலெடுத்துக் கொண்டு டாஸ் வென்று கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தார் அந்த அணியில் அனைவரும் கையில் கொடுத்து விட்டு, விக்கெட்டைத் தூக்கி எறிந்து 128 ரன்களுக்குச் சுருண்டனர், திரும்பவும் ஆடிய ராயல் சாலஞ்சர்ஸ் அனாயசமாக இலக்கை விரட்டாமால் 17/3, 62/4 என்று வாடி வதங்கி கடைசியில் இந்த இலக்கை 19.2 ஓவர்கள் எடுத்துக் கொண்டு 132/7 என்று வெற்றி பெற்றது.

  ஐபிஎல் போட்டிகளின் மேல் சந்தேகம் வரவைப்பது இத்தகைய போட்டிகள் என்றால் மிகையாகாது. ஷ்ரேயஸ் அய்யர் அணி ஏன் அப்படி பேட்டிங்கில் ஆடினார்கள் என்பது ‘உஷ்’ கண்டுக்காதீங்க! தருணமாகும். இரு அணிகளுமே பவர் ப்ளேயில் டாப் ஆர்டரை இழந்தது. 4 வேகப்பந்து வீச்சாளர்களை ஆர்சிபி வைத்திருந்தது பிட்சின் தன்மையை உணர்த்துகிறது என்றாலும் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை எடுத்தது உறுத்தவே செய்கிறது.

  பிட்சினால் அல்ல விக்கெட்டுகள், ரகானே புல் ஷாட்டை நேராக கையில் அடித்தார். சிராஜ் பவுலர். வெங்கடேஷ் அய்யர் புல் ஆட முடியாத பந்தை புல் ஆட முயன்று ஆகாஷ் தீப் பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். நிதிஷ் ராணா அவுட் ஆனது சுத்த நான்-சென்ஸ், அப்போதுதான் விக்கெட் போயிருக்கிறது, இவர் நல்ல பந்தை லெக் திசையில் சுற்றப்பார்த்தார், என்ன ஸ்ட்ரோக் இது? கொடியேற்றி அவுட் ஆனார். ஷ்ரேயஸ் அய்யர் தூக்கி கையில் கொடுத்தார். சுனில் நரைன் அவர் எப்போதும் போல் ஆடி அவுட் ஆனார். சாம் பில்லிங்ஸும் கையில் கொடுத்து விட்டுப் போனார். ஷெல்டன் ஜாக்சன், ஹசரங்காவின் அருமையான கூக்ளிக்கு இரையானார் இது மட்டுமே சிறந்த பந்து. மற்றெல்லாம் விக்கெட்டுகளை வேண்டுமென்றே கொடுத்ததுதான்.

  ஆந்த்ரே ரஸல், 25, உமேஷ் யாதவ் 18 ஆகியவற்றால் கொல்கத்தா 128 ரன்களையாவது எடுத்தது. ஆனால் இது எப்படியும் வெற்றி பெற முடியாத டோட்டல்தான். 9 விக்கெட்டுகளை இழந்தாவது ஆர்சிபி இதை வென்று விடும் என்று முதல் இன்னிங்ஸிலேயே தெரிந்து விட்டதாலும், ஆர்சிபி அணியில் அனுஜ் ராவத் உமேஷ் யாதவ்வின் அற்புத பந்துக்கு எட்ஜ் ஆகி வெளியேற, டுபிளெசிஸ் லெக் திசையில் ஆடுகிறார் பந்து பேக்வர்ட் பாயிண்ட் என்ற ஆஃப் திசையில் ரகானேவிடம் கேட்ச் ஆனது. இது என்ன ஷாட்? விராட் கோலி வெளியே செல்லும் பந்தின் மீது காதல் நிரம்ப மட்டையைக்கொண்டு சென்றார் பந்து முத்தம் கொடுத்து எட்ஜ் ஆனது.

  அதாவது17/3 என்று அவசரம் அவசரமாக விக்கெட்டுகள் விழும்போதே தெரிந்தது, எப்படியும் ஆர்சிபி நாம் தான் ஜெயிக்கப்போகிறோம் என்று ஆடியது போல் தோன்றியது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை, தினேஷ் கார்த்திக் ரஸலை ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க ஆட்டம் சுபம். ஆர்சிபி வென்றது.

  அதாவது கொல்கத்தா ஆடியதை ப்பார்த்தால் ’நாங்க அடிக்கிற மாதிரி அடிப்போம் ஆனா அவுட் ஆகிடுவோம், விக்கெட் எடுக்கற மாதிரி எடுப்போம் ஆனா தோத்துடுவோம் என்பது போலவே இருந்தது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, KKR, RCB

  அடுத்த செய்தி