Home /News /sports /

கொல்கத்தா அணியை தேர்வு செய்வது அணியின் சி.இ.ஓ வெங்கி?

கொல்கத்தா அணியை தேர்வு செய்வது அணியின் சி.இ.ஓ வெங்கி?

மெக்கல்லம், வெங்கி மைசூர், ஸ்ரேயஸ் அய்யர்

மெக்கல்லம், வெங்கி மைசூர், ஸ்ரேயஸ் அய்யர்

கொல்கத்தா அணி குறித்த உள் விவகாரங்கள் பல கசிந்து வருகின்றன, அணியைத் தேர்வு செய்வது அணியின் சி.இ.ஓ. வெங்கி என்று கூறியுள்ளா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர்.

    கொல்கத்தா அணி குறித்த உள் விவகாரங்கள் பல கசிந்து வருகின்றன, அணியைத் தேர்வு செய்வது அணியின் சி.இ.ஓ. வெங்கி என்று கூறியுள்ளா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர்.

    ப்ளேயிங் லெவனில் எந்த வீரராவது இன்றைய ஆட்டத்தில் இல்லை என்பதை சகவீரர்களிடம் எவ்வாறு சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இதே நிலையை நானும் கடந்து வந்திருக்கிறேன் என்கிறார் ஸ்ரேயஸ் அய்யர்.

    ஏற்கெனவே பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லமுடன் டவுன் ஆர்டர் பற்றி வாக்குவாதம் புரிந்திருக்கிறார் ஸ்ரேயஸ் அய்யர். கொல்கத்தா அணி ஏன் உருப்படாமல் போகிறது என்பதற்கு இவையெல்லாம்தான் காரணம் என்ற பேச்சுக்கள் ஐபிஎல் வட்டாரங்களில் எழத் தொடங்கியுள்ளன.

    நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. பும்ரா 5 விக்கெட்டுகளை 10 ரன்களுக்கு எடுத்து மேலே சென்றிருக்க வேண்டிய ஸ்கோரை மட்டுப்படுத்தினார்.

    166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

    வெற்றிக்குப்பின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் அளித்த பேட்டியில், “அணியில் ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது கடினமானதாக இருந்தது. ஏனென்றால், ஐபிஎல் தொடங்கும்போதே நானும்கூட அந்தநிலையில்தான் இருந்தேன். பயிற்சியாளர்களுடன் ஆலோசித்தோம், அணித் தேர்வில் சிஇஓ வெங்கியும் சேர்ந்துதான் அணியைத் தேர்வு செய்தார். பயிற்சியாளர் மெக்கலம் அணி வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் சென்று ப்ளேயிங் லெவன்பற்றி தெரிவித்தார்.

    சகவீரர்களிடம் சென்று நீங்கள் ப்ளேயிங் லெவனில் இல்லை என நான் எப்படி கூற முடியும் என்று தெரியவில்லை. ஆனால்,சூழலைப்புரிந்து கொண்டு வீரர்கள் ஆதரவாக இருந்தார்கள். மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றிருக்கிறோம்.

    இதைதான் எதிர்பார்த்திருந்தோம், இது எனக்கு மனநிறைவை அளிக்கிறது.பவர்ப்ளேயில் நல்ல தொடக்கம் கிடைத்தது, நிதிஷ் ராணாவும் ரன்களை வேகமாக ஸ்கோர் செய்தார். பொலார்ட் ஓவரில் ராணா அடித்த சிக்ஸர்கள் அருமையானது

    இதற்கு முன் நடந்த போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம், கடந்த போட்டியில்கூட தோல்வி அடைந்தோம். மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்றாலும் மீண்டும் திரும்ப வந்திருக்கிறோம்,
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, KKR, Shreyas Iyer

    அடுத்த செய்தி