முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2022 GT vs PBKS-லிவிங்ஸ்டன் சரவெடி இல்லையெனில் சோர்வூட்டும் ஆட்டம்- மகா அறுவை போட்டியில் பஞ்சாப் வெற்றி

IPL 2022 GT vs PBKS-லிவிங்ஸ்டன் சரவெடி இல்லையெனில் சோர்வூட்டும் ஆட்டம்- மகா அறுவை போட்டியில் பஞ்சாப் வெற்றி

ஆட்ட நாயகன் ரபாடா

ஆட்ட நாயகன் ரபாடா

மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 48வது ஆட்டம், மகா அறுவையான ஆட்டமாக சோர்வூட்டியது. கேகிசோ ரபாடாவின் 4 விக்கெட், மற்றும் எப்படி வேண்டுமானாலும் அடித்து நொறுக்க வேண்டிய பவுலரான சந்தீப் சர்மாவின் 4 ஓவர் 17 ரன் ஸ்பெல்களினால் குஜராத் டைட்டன்சை 143/8 என்று முடக்கியது பஞ்சாப் கிங்ஸ். திரும்பி இலக்கை விரட்டுகையில் 16 ஓவர்களில் 145/2 என்று பஞ்சாப் வெற்றி பெற்றது,

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 48வது ஆட்டம், மகா அறுவையான ஆட்டமாக சோர்வூட்டியது. கேகிசோ ரபாடாவின் 4 விக்கெட், மற்றும் எப்படி வேண்டுமானாலும் அடித்து நொறுக்க வேண்டிய பவுலரான சந்தீப் சர்மாவின் 4 ஓவர் 17 ரன் ஸ்பெல்களினால் குஜராத் டைட்டன்சை 143/8 என்று முடக்கியது பஞ்சாப் கிங்ஸ். திரும்பி இலக்கை விரட்டுகையில் 16 ஓவர்களில் 145/2 என்று பஞ்சாப் வெற்றி பெற்றது, இது ஏதோ சுலபமான வெற்றி போல் தெரியலாம், ஆனால் மொத்தத்தில் மகா அறுவையான இந்த ஆட்டத்திற்கு கடைசியில் லிவிங்ஸ்டன் உயிரூட்டியதால் கொஞ்சம் பிழைத்தது.

8 ஓவர்கள் பவுண்டரியே வரவில்லை, இப்படி ஷார்ட் ஆஃப் குட் லெந்தில் குத்தி லேசாக ஸ்விங் செய்யும் சந்தீப் சர்மா அன்று சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டும் ஃபுல்டாஸ்களாக இறக்கி சாத்து வாங்கி போட்டியையே தோற்கடித்திருப்பார், இது எப்படி? இதுதான் உஷ் கண்டுக்காதீங்க என்பது. நேற்று 4 ஓவர் 17 ரன். இதுதான் ஐபிஎல் தொடரின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது.

ஷுப்மன் கில் இப்படியெல்லாம் ஆடிக்கொண்டிருந்தால் இந்திய அணிக்குத் திரும்புவது கடினமே. சிங்கிள் இருக்கிறதா, ஷாட் டைமிங் என்ன, பீல்டரை அது எத்தனை விரைவாக சென்றடைகிறது, ஆகவே அங்கு ஒரு ரன் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கிரிக்கெட்டின் அடிப்படை விஷயங்கள் இதைக் கணிக்கத் தவறினால் அவர் பேடைக் கட்டிக்கொண்டு கொஞ்ச நாள் ஸ்டம்புகளுக்கு இடையே ஓடிப்பழக வேண்டியதுதான். இதில் சந்தீப் சர்மா மீது அதிருப்தி அடைந்தார் ஷுப்மன் கில், சந்தீப் சர்மா அவரது ஃபாலோ த்ரூவில் சரியாகவே நின்று கொண்டிருந்தார். ரிஷி தவான் த்ரோ துல்லியம்.

விருத்திமான் சஹா பாவம் 17 பந்துகளில் 21 ரன்கள் என்று வேகம் காட்டினார், ஆனால் இவரும், கில்லும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர், ஹர்திக் பாண்டியா 1 ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வெறும் பந்தாதான் இருக்கிறதே தவிர பொறுப்பு இல்லை. 7 பந்துகளை பிளாக் செய்து கொண்டே வந்தார். ஒரே டாட் பால்கள் கடைசியில் ரிஷி தவானின் சாதாரண பந்தில் விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் செய்து 1 ரன்னில் வெளியேற்றப்பட்டார்.

டேவிட் மில்லர் 14 பந்தில் 11, ராகுல் திவாத்தியா 13 பந்தில் 11 பவுண்டரிகள் இல்லை. ரஷீத் கான் டக் அவுட் ஆகி ரபாடாவிடம் வெளியேறினார். சாய் சுதர்சன் மட்டும் ஒருமுனையில் 50 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸ் அடித்து 65 ரன்கள் என்று நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், ஆனால் இவர் அதிக ஸ்கோர் என்பதனால் இவர் இல்லாவிட்டால் ஸ்கோர் அவ்வளவுதான் என்று தோன்றும், ஆனால் இவர் ஒருமுனையில் நின்றதால்தான் ஸ்கோர் வரவில்லை என்றும் கூற முடியும், அடிக்க வேண்டிய பந்தை எல்லாம் சொதப்பு சொதப்பென்று சொதப்பினார் சாய் சுதர்ஷன். ரபாடா 4 ஓவர் 33 ரன் 4 விக்கெட். ரிஷி தவான், ராகுல் சாஹர், லிவிங்ஸ்டன் எல்லோரையும் அடிக்க முடியாமல் திணறினர் குஜராத் டைட்டன்ஸ். மகா அறுவையான ஆட்டத்தில் குஜராத் 143/8 என்று முடிந்தது.

லிவிங்ஸ்டன் இல்லையெனில் செத்த விரட்டலாகியிருக்கும்:

சரி ஆட்டம் இவ்வளவு அறுவையாக இருக்கிறதே தொலைக்காட்சிப் பெட்டியை மூடி விட்டு தூங்கலாம் என்று நினைக்கும் போது ஜானி பேர்ஸ்டோவை ஓபனிங் இறக்கி விட்டு கொஞ்சம் நம்பிக்கை அளித்தார் மயங்க் அகர்வால். ஆனால் அவர் நான் மட்டும் என்ன இளிச்சவாயனா என்று 6 பந்துகள் ஆடி 1 ரன்னில் ஷமி பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஷிகர் தவான் எப்போதும் தன்னலமற்ற ஒரு வீரர், அவருடன் பனுகா ராஜபக்ச இணைந்தார். தவான் 2 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்தார். ராஜபக்ச ஷமியை 2 பவுண்டரிகள் விளாசினார். அல்ஜாரி ஜோசப்பை ஷிகர் தவான் அருமையாக ஒரு சிக்ஸ் மற்றும் லெக் சைடில் போட்டுக் கொடுத்த பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்தார். பிறகு சங்வான் வந்தார். ஒரே ஓவரில் 15 ரன்களைக் கொடுத்தார். மீண்டும் ரஷீத் கானை மட்டும் அடிக்க பயப்படுகின்றனர், குறைந்த இலக்குதானே அவரையும் ஒரு கை பார்க்க வேண்டியதுதானே?

ஷிகர் தவான் அரைசதம் எடுக்க ராஜபக்ச 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் எல்.பி.ஆனார். வந்தார் லியாம் லிவிங்ஸ்டன். 30 பந்தில் 27 ரன்கள் தேவை. ஆனால் அவர் எனக்கு 6 பந்து போதும் என்றார். அதுவும் ஷமியின் ஒரு பந்தை அவர் சிக்ஸ் அடித்த தூரம் 117 மீ. 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் ஒரு 2 என்று ஒரே ஓவரில் மேட்சை முடித்தார், இவரது சரவெடி இல்லையெனில் இந்த போட்டி மிக அறுவையான போட்டியாகவே இருந்திருக்கும். 10பந்தில் லிவிங்ஸ்டன் 30 நாட் அவுட், ஷிகர் தவான் 53 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸ் 62 நாட் அவுட். ஆட்ட நாயகன் கேகிசோ ரபாடா.

First published:

Tags: Gujarat Titans, IPL 2022, Punjab Kings