பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸின் மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு ஜான்டி ரோட்ஸ் நெகிழ்ச்சி தரும் தருணத்தை வழங்கினார். ஒரு காலத்தில் மும்பை அணிக்காக பணியாற்றிய ரோட்ஸ், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனது பணியை ஏற்றுள்ளார். போட்டி மும்பையின் தோல்வியில் முடிந்ததும், அணிகள் கைகுலுக்க வெளியே வந்தவுடன், ரோட்ஸ் சச்சின் டெண்டுல்கரின் கால்களைத் தொட்டார்! டெண்டுல்கர் இந்தியாவில் கிரிக்கெட்டின் கடவுள் என்று கருதப்படுவதால் இது விதிவிலக்கல்ல. பல கிரிக்கெட் வீரர்கள், யுவராஜ் சிங் மற்றும் வினோத் காம்ப்ளி போன்ற பிரபலமான பெயர்கள் டெண்டுல்கரின் கால்களைத் தொடுவதை விட்டு விலகுவதில்லை. ரோட்ஸ் சமீபத்தியவர்.
மும்பை இந்தியன்ஸில் முதன்முதலில் சச்சின் ரோட்ஸை பீல்டிங் பயிற்சியாளராகப் பிடித்துப்போட்டார், பெரிய சம்பளம், நன்றி இல்லாமல் இருக்குமா? தென் ஆப்பிரிக்காவுக்கு 100 வருடம் கிரிக்கெட் ஆடியிருந்தால் கூட ரோட்ஸ் ஐபிஎல் சம்பாதித்ததை சம்பாதிக்க முடியாது, எனவே நன்றி நவிலலில் இந்தியராகவே ஆகிவிட்ட ரோட்ஸ் காலில் விழும் கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றி சச்சின் காலில் விழுந்தார், ஏற்கெனவே நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்களை தெய்வமாக, கடவுளாக வழிபட்டு கட் அவுட் பாலாபிஷேகம் செய்யும் நாட்டில் ஜாண்ட்டி ரோட்ஸ் செய்கை நிச்சயம் அதிசயமாக இருக்காது,
ஆனால் மேற்கத்திய நாடுகளில் நிச்சயம் இது ஒரு மூடத்தனமாகவே பார்க்கப்படும் என்பது உறுதி. நன்றி நவிலலுக்கு பல வழிகள் உள்ளன. காலில் விழும் கலாச்சாரம் மிக மோசமானது. வீரர்கள் காலில் ரசிகர்கள் விழுவது இந்தக் கலாச்சாரத்தில் வெகு சகஜம், ஆனால் ஒரு வீரர் மற்றொரு வீரர் காலில் விழும் புதிய பாதம் தொடு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளார் ஜாண்ட்டி ரோட்ஸ்.
வீடியோவில் காணக்கூடியது போல, ரோட்ஸ் சச்சின் குனிந்து அவரது பாதங்களைத் தொட்டபோது தெரியாமல் பிடித்தார். மாஸ்டர் விரைவில் ரோட்ஸைத் தடுத்து நிறுத்தினார், அதன் பிறகு அவர் அவரைத் தழுவினார். ஆனால் இந்த சம்பவம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில சிறந்த எதிர்வினைகள் இங்கே.
What a gesture !!
Jonty Rhodes, who is four years older than Sachin, suddenly touches the feets of later in respect. Sachin realised Jonty's attempt and tried hard to stop him, but again the worlds best ever fielder wins the race.
Beyond the word. pic.twitter.com/iH1MBlcLdS
மும்பை தனது ஐந்தாவது ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு ரோட்ஸின் இந்த பாதம்தொடு வைபவம் நடந்தது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அட்டவணையின் பாதத்தில் இருப்பதை சிம்பாலிக்காகக் காட்டுவதற்காகக் கூட ரோட்ஸ் சச்சின் காலைத் தொட்டதாக நாம் ஒரு புது விளக்கமும் கொடுக்கலாம். இதற்கிடையில், ரோட்ஸ் ஒருமுறை மும்பைக்காக பணிபுரிந்தார், அதன் பிறகு அவர் பஞ்சாப் கிங்ஸுக்குப் புறப்பட்டு 2020 இல் சேர்ந்தார். தென்னாப்பிரிக்கரான ரோட்ஸ் 2017 வரை மும்பையுடன் இருந்தார், எட்டு வருடங்களுக்கும் மேலாக அவர் அங்கேயே இருந்ததால் சச்சின் - ரோட்ச் பந்தம் ஓர் அசைக்க முடியாத பந்தமாக இருக்கிறது என்றும் கூற முடியும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.