Home /News /sports /

சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாதான் கேப்டன்- அடித்துக் கூறும் முன்னாள் வீரர்கள்

சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாதான் கேப்டன்- அடித்துக் கூறும் முன்னாள் வீரர்கள்

ரவிந்திர ஜடேஜா - டோனி

ரவிந்திர ஜடேஜா - டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி தக்கவைக்கப்பட்டனர், டுபிளெசிஸ், சென்னை அணிக்காக பிரமாதமாக ஆடிய அம்பதி ராயுடு, ரெய்னா போன்றோர் கழற்றி விடப்பட்டுள்ளனர், புஜாரா வாய்ப்பளிக்கப்படாமலேயே கழற்றி விடப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிஎஸ்கே அணிக்கு தோனிக்குப் பிறகு ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று முன்னாள் விரர்கள் சிலர் கணித்துள்ளனர். சென்னையில்தான் தன் கடைசி போட்டி என்று தோனி அறிவித்துள்ள நிலையில் ஐபிஎல் 2022 தொடர் முழுதும் தோனி ஆடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

    40 வயதான தோனி அனேகமாக அடுத்த ஐ.பி.எல். போட்டியுடன் ஓய்வு பெற்று விடுவார் என்று தெரிகிறது. தவிர முன்பு போல அவரது பேட்டிங் இல்லை. அதனால் தக்கவைக்கப்படும் வீரர்களை வரிசைப்படுத்துவதில் டோனி தனது பெயரை 2-வது இடத்துக்கு கொண்டு சென்றார். இதனால் அவரது ஊதியம் கடந்த சீசனை விட ரூ.3 கோடி குறைந்து விட்டது. அதே சமயம் ஜடேஜாவுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.

    சென்னை அணிக்கு ஆடிய மூத்த வீரர் ராபின் உத்தப்பா கழற்றி விடப்பட்டுள்ளார், இத்தனைக்கும் உத்தப்பா பிரமாதமாக ஆடினார். அவர் என்ன கூறுகிறார் என்றால், “நிச்சயம் தோனி தான், ஜடேஜாவுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பார். அணியில் ஜடேஜாவின் மதிப்பு அவருக்கு நன்கு தெரியும். டோனி ஓய்வு பெறும் போது ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் வழங்கும் தொகைக்கு ஜடேஜா தகுதியானவர்’ என்றார்.

    முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறும்போது, ‘சென்னை அணியின் அடுத்த கேப்டன் என்ற அடிப்படையில் தான் ஜடேஜாவுக்கு இவ்வளவு தொகை வழங்கப்படும் என்று நினைக்கிறேன். அவர் அற்புதமான ஒரு வீரர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே தோனி இனி விளையாடப்போவதில்லை என்ற முடிவுக்கு வரும் போது கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஏற்பார் என்று கருதுகிறேன்’ என்றார்.

    இதையும் படிங்க: ஐபிஎல்: அணிகள் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள் யார்யார்? முழு விவரம்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி தக்கவைக்கப்பட்டனர், டுபிளெசிஸ், சென்னை அணிக்காக பிரமாதமாக ஆடிய அம்பதி ராயுடு, ரெய்னா போன்றோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். புஜாரா வாய்ப்பளிக்கப்படாமலேயே கழற்றி விடப்பட்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL, IPL 2021

    அடுத்த செய்தி