கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தேர்வில் அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் சிஇஓ வெங்கி மைசூர் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளதையடுத்து ஜடேஜா அது உண்மைதான் என்று அய்யருக்கு சப்போர்ட் செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தேர்வில் அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் சிஇஓ வெங்கி மைசூர் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளதையடுத்து ஜடேஜா அது உண்மைதான் என்று அய்யருக்கு சப்போர்ட் செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் நேற்று கூறியபோது, “அணியில் ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது கடினமானதாக இருந்தது. ஏனென்றால், ஐபிஎல் தொடங்கும்போதே நானும்கூட அந்தநிலையில்தான் இருந்தேன். பயிற்சியாளர்களுடன் ஆலோசித்தோம், அணித் தேர்வில் சிஇஓ வெங்கியும் சேர்ந்துதான் அணியைத் தேர்வு செய்தார். பயிற்சியாளர் மெக்கலம் அணி வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் சென்று ப்ளேயிங் லெவன்பற்றி தெரிவித்தார்.சகவீரர்களிடம் சென்று நீங்கள் ப்ளேயிங் லெவனில் இல்லை என நான் எப்படி கூற முடியும் என்று தெரியவில்லை. ஆனால்,சூழலைப்புரிந்து கொண்டு வீரர்கள் ஆதரவாக இருந்தார்கள்.” என்றார் அய்யர்.
இப்போது ஸ்ரேயஸ் அய்யர் கூறுவது உண்மைதான் என்று அஜய் ஜடேஜா உறுதி செய்து கூறிய போது, “இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தலைமை நிர்வாக அதிகாரி குழுதான் அணியை நடத்துகிறார். வெற்றி பெற்றால் தலைமை நிர்வாக அதிகாரிக்கு பாராட்டும், தோற்றால் அவர் மீது கடும் விமர்சனங்களும் குட்டும் விழும். இது எப்பொழுதும் இருந்து வருகிறது, இதற்கு முன்னரும் இப்படித்தான் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
இது தொடர்பாக பல கருத்துக்கள் புழங்கி வருகின்றன, அதாவது கேப்டன் தான் அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும், சி.இ.ஓ. ஈடுபடக்கூடாது, சில பயிற்சியாளரே அணியின் தேர்வு, டவுன் ஆர்டர் போன்றவற்றில் தலையிடக்கூடாது என்று பலர் கருதுகின்றனர். இன்னும் சிலரோ கேப்டன் வேண்டாம் சி.இ.ஓ.தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார்கள்.
ஸ்ரேயஸ் அய்யர் கூறுவது கரெக்ட், ஏனென்றால், பாட் கமின்ஸ் எவ்வளவு பெரிய வீரர், ஆஸ்திரேலியாவின் கேப்டன் அவரிடம் போய் காரணமில்லாமல் அவரை உட்கார வைக்கும் போது கேப்டன் போய் நீங்கள் ட்ராப் என்று கூற முடியாது, அது பெரிய தர்ம சங்கடம், ஸ்ரேயஸ் கூறுவது சரிதான். உலகின் சிறந்த வீரரிடம் போய் எப்படிச் சொல்வது? இது யாருக்குமே கடினமே.
இப்போது புரிகிறது அணியை நடத்துவது யார் என்று, அது சி.இ.ஓ.தான். குறைந்தது இப்போதாவது தெரிந்ததே. எனவே அடுத்த முறை பார்க்கும் போது நமக்கு புரியும் ஓஹோ இது கேப்டனின் முடிவல்ல, சி.இ.ஓ.வின் முடிவு என்று. ” என்கிறார் அஜய் ஜடேஜா.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.