ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறியதையடுத்து தோனியின் முடிவு தாமதமாக வந்ததாக அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் சாடியுள்ளார்.
தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 27 ரன்கள் விளாச, டுபிளெசிஸ் 22 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க, கோலி தண்டமாக ஆடி 33 பந்தில் 30 மட்டுமே எடுத்து பிரமாதமான மொயின் அலி பந்தில் பவுல்டு ஆக மஹிபால் லோம்ரோர் 27 பந்தில் 42 விளாசியதில் ஆர்சிபி 173/8 என்று நல்ல ஸ்கோரை எட்டியது, ஆனால் இது எடுக்க முடியாத ரன் எண்ணிக்கை அல்ல. இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியில் கான்வே 56 மட்டுமே சொல்லிக் கொள்ளும் படி அமைய 160/8 என்று முடிந்தது சிஎஸ்கே, அத்தோடு முடிந்தும் போனது.
சிஎஸ்கேவின் இந்த பரிதாப நிலை குறித்து சேவாக் கூறும்போது, “தொடக்கமே சரியில்லை, சீசன் ஆரம்பத்துலேயே தோனி கேப்டன் இல்லை என்றார்கள். ஜடேஜாதான் கேப்டன் என்றார்கள் இது ஒரு மிஸ்டேக். இது தவறான முடிவு. சரி ஜடேஜாதான் கேப்டன் என்றால் மொத்த தொடருக்கும் அவரையே கேப்டன்சி செய்ய விட்டிருக்கலாம்.
சிஎஸ்கே எப்போதும் ஒரு நிலையான செட்டில்டு 11 வீரர்களைக் கள்மிறக்கும், இந்த முறை அது இல்லை, ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் சொதப்பினார். பேட்டர்கள் ரன்கள் அடிப்பதில்லை, ஒரு மேட்ச் தோனி அடிக்கிறார், இன்னொரு மேட்சில் ருதுராஜ் அடிக்கிறார். அதிலிருந்து சீசன் அவர்களுக்கு அலங்கோலமாகப் போய்விட்டது.
தொடக்கத்தில் இருந்தே தோனி கேப்டனாக இருந்திருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமான தோல்விகளை சந்தித்திருக்காது அல்லது பிளே ஆப் சுற்று வாய்ப்பிலாவது நீடித்திருக்கும்.” இவ்வாறு கூறுகிறார் சேவாக்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.