Home /News /sports /

IPL 2022: சிஎஸ்கே அணியில் ஆட விரும்புகிறேன் - தினேஷ் கார்த்திக்

IPL 2022: சிஎஸ்கே அணியில் ஆட விரும்புகிறேன் - தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

Dinesh Karthik | இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க தனது பினிஷிங் திறமைகளை மும்பையில் அபிஷேக் நாயர் மெற்பார்வையில் கூர்மைப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக், வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு ஆட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க தனது பினிஷிங் திறமைகளை மும்பையில் அபிஷேக் நாயர் மேற்பார்வையில் கூர்மைப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக், வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு ஆட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    கடைசியாக 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்காக ஆடினார் தினேஷ் கார்த்திக். இன்னும் 3-4 ஆண்டுகள் ஆடுவதாக உறுதிபூண்டுள்ள தினேஷ் கார்த்திக் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஆட விருப்பம் கொண்டுள்ளார்.

    அணியில் இடம் கிடைக்காததால் வர்ணனையில் ஈடுபட்டார். இந்நிலையில் இந்திய அணிக்காக ஆடுவதில் பெரிய விருப்பம் கொண்டுள்ளதாக அவர் கூறும்போது, “ஷிகர் தவானுக்கு வயது 36, பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் 40 வயது வரை ஆடவில்லையா? இவர்கள் சாதிக்கும் போது என்னாலும் முடியும். அணியில் இடம்பெற வயது தடையில்லை, பார்ம், அனுபவம், உடல் தகுதி இருந்தால் போதும். இதனால் நண்பர் அபிஷேக் நாயரின் மேற்பார்வையில் என் பினிஷிங் திறமகளை கூர்மையாக்கி வருகிறேன்.

    உள்ளூர் ஐபிஎல் போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கி முழுத்திறமையையும் பயன்படுத்த முயற்சி செய்வேன், இந்திய அணியில் மிடில் ஆர்டருக்கு இன்னும் சரியான வீரர்கள் செட் ஆகவில்லை. இதனால் இந்திய அணியில் மீண்டும் எனக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்றே நம்புகிறேன்” என்றார்.

    ஐபிஎல் தொடரில் எந்த அணி?

    நான் சிஎஸ்கேக்காக விளையாடினால் மிகவும் நல்லது, நான் சென்னையைச் சேர்ந்தவன். ஆனால் எனக்கு முக்கியமானது என்னவென்றால், நான் எந்த அணியில் விளையாடினாலும் அது ஒரு முழுமையான கவுரவம் என்பதாகவே பார்க்கிறேன், ஏனென்றால் நான் சொன்னது போல், இந்த நாட்களில் நான் செய்து வரும் இந்த நடைமுறை அனைத்து முயற்சிகளும் ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் கைகூடினால் நல்லது.

    இதையும் படிங்க: IPL போதும், ரஞ்சி டிராபி வேண்டாம்: ஹர்திக் பாண்டியா விலகல்
     பன்னாட்டு போட்டிகளில் அனுபவம் மிக முக்கியமான காரணியாகும். கடந்த சில போட்டிகளில் நீங்கள் அதை தெளிவாகக் காணலாம்.

    இவ்வாறு கூறினார் தினேஷ் கார்த்திக்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dinesh Karthik, IPL 2022, Team India

    அடுத்த செய்தி