ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் டிசம்பரில் முதலில் நடப்பதாக இருந்தது, இப்போது பிசிசிஐ ஐபிஎல் மெகா ஏலத்தை 2022 பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் இருநாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதான் பிசிசிஐ நடத்தும் கடைசி மெகா ஏலமாக இருக்கும், ஏனெனில் அணி உரிமையாளர்கள் ஐபிஎல் ஏலத்தை நிறுத்துமாறு கோரியுள்ளனர். இது தொடர்பாக பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி கூறும்போது, “கொரோனா சூழ்நிலைகள் மோசமடைந்தாலே தவிர மெகா ஏலம் இந்தியாவில்தான் நடைபெறும், பிப்ரவரி 7 மற்றும் 8 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
ஓமிக்ரான் வேரியண்ட் அலை அடித்து வருவதால், இந்தியாவில் பெரிய தாக்கம் இல்லை என்றாலும் ஒருவேளை அப்படி ஏதாவது நடந்தால் சிக்கலாகி விடும். அப்போது ஓவர்சீஸ் பயணத்துக்கு கட்டுப்பாடுகள் வந்தாலும் வரலாம் எனவே ஏலத்தை இந்தியாவில் நடத்துவதே உசிதம் என்று உரிமையாளர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 2 புதிய அணிகள் வந்துள்ளன. சஞ்சிவ் கோயெங்காவின் லக்னோ அணி மற்றும் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனமான அகமதாபாத் ஆகியவை வந்துள்ளதால் தொடர் பெரிய தொடராக இருக்கும்.3 வீரர்களை முன் கூட்டியே ஒப்பந்தம் செய்ய கிறிஸ்துமஸ் வரை இரு அணிகளுக்கும் நேரம் இருக்கிறது.
ஐபிஎல் 2022: அணிகள் தக்க வைத்த வீரர்கள் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.15 கோடி செலவில் கேப்டன் விராத் கோலி, ரூ.11 கோடி செலவில் க்ளின் மேக்ஸ்வெல் ரூ.7 கோடி செலவில் எம்.டி.சிராஜ் ஆகியோரை தக்க வைத்துகொண்டுள்ளது
சிஎஸ்கே அணி ரவிந்திர ஜடேஜாவுக்கு ரூ.16 கோடியும், டோனிக்கு ரூ.12 கோடியும், மொயின் அலிக்கு ரூ.8 கோடியும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.6 கோடியும் செலவிட்டு அவர்களை தக்க வைத்துள்ளது.
பஞ்சாப் அணி இரண்டு உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. ரூ.12 கோடி செலவில் மாயங் அகர்வால், ரூ.4 கோடி செலவில் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.16 கோடி செலவில் கேப்டன் ரோகித் சர்மா, ரூ.12. கோடி செலவில் ஜஸ்பிரித் பும்ரா, ரூ.8 கோடியில் சூர்யகுமார் யாதவ், ரூ.6 கோடியில் பொல்லார்ட் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.14 கோடி செலவில் கேன் வில்லியம்சன், ரூ.4 கோடி செலவில் அப்துல் சமத், ரூ.4 கோடி செலவில் உம்ரன் மாலிக் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.16 கோடி செலவில் ரிஷப் பண்ட், ரூ.9 கோடி செலவில் அக்சார் படேல், ரூ.7.50 கோடி செலவில் பிரித்வி ஷா, ரூ.6.50 கோடி செலவில் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரை தக்க வைத்துள்ளது
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ரூ.12 கோடி செலவில் ஆந்த்ரே ரசல், ரூ. 8 கோடி செலவில் வருன் சக்கரவர்த்தி, ரூ.8 கோடி செலவில் வெங்கடேஷ் அய்யர், ரூ.6 கோடி செலவில் சுனில் நரேன் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.14 கோடி செலவில் சஞ்சு சாம்சன், ரூ.10 கோடி செலவில் ஜோஸ் பட்லர், ரூ.4 கோடி செலவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
வீரர்களை தக்க வைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை போக தற்போது பெங்களூர் அணியிடம் ரூ.57 கோடியும், மும்பை அணியிடம் ரூ.48 கோடியும், பஞ்சாப் அணியிடம் ரூ.72 கோடியும், ஹைதராபாத் அணியிடம் ரூ.68 கோடியும், சிஎஸ்கே அணியிடம் ரூ.48 கோடியும், டெல்லி அணியிடம் ரூ.47.5 கோடியும், கொல்கத்தா அணியிடம் ரூ. 48 கோடியும், ராஜஸ்தான் அணியிடம் ரூ. 62 கோடியும் மீதமுள்ளன. இந்த தொகைக்குள்தான் பிற வீரர்களை அந்த அணிகள் வாங்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.