Home /News /sports /

ஹெல்மெட், பேட்டை விட்டெறிந்த மேத்யூ வேட், டெக்னாலஜியே ஏமாத்தினா யாரை நம்புவது?- பாண்டியா ஆதங்கம்

ஹெல்மெட், பேட்டை விட்டெறிந்த மேத்யூ வேட், டெக்னாலஜியே ஏமாத்தினா யாரை நம்புவது?- பாண்டியா ஆதங்கம்

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

மேத்யூ வேட் எல்.பி. தீர்ப்புதான் பேசுபொருளாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பந்து மட்டையில் பட்டது என்பதுதான் வேட், பாண்டியாவின் வாதம், ஆனால் படவில்லை என்கிறது டெக்னாலஜி. ஒரு ஆங்கிளில் பந்து நிச்சயமாக மட்டையில் பட்டது, எப்போதுமே கிரிக்கெட்டில் எழுதப்படாத விதி சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மெனுக்கு சாதகமாக்குவதுதான் (benefit of doubt goes to batsmen).

மேலும் படிக்கவும் ...
    நேற்றைய ஆட்டத்தில் என்னவோ குஜராத் கொஞ்சம் விட்டேத்தியாக பேட்டிங் ஆடியது என்னவோ உண்மைதான், சஹாவை ரன் அவுட்டுக்கு இழுத்து விட்டார் பாண்டியா, ஆனால் மேத்யூ வேட் எல்.பி. தீர்ப்புதான் பேசுபொருளாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பந்து மட்டையில் பட்டது என்பதுதான் வேட், பாண்டியாவின் வாதம், ஆனால் படவில்லை என்கிறது டெக்னாலஜி. ஒரு ஆங்கிளில் பந்து நிச்சயமாக மட்டையில் பட்டது, எப்போதுமே கிரிக்கெட்டில் எழுதப்படாத விதி சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மெனுக்கு சாதகமாக்குவதுதான் (benefit of doubt goes to batsmen).

    ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது, இரண்டு அடி இறங்கி வந்து ஆடும் பேட்டருக்கு எல்.பி.கொடுக்கிறார்கள், நேற்று மேத்யூ வேட் பேட்டில் பட்டது ஒருபுறம் இருக்கட்டும். அத்தனை ஷார்ட் பிட்ச் பந்துக்கு எல்.பி. தரலாமா என்பதுதான் கேள்வி. அந்த தூரத்திலிருந்து பந்து ஸ்டம்பை தாக்கும் நடுவே டீவியேஷன் இருக்காது என்று டெக்னாலஜி சொன்னாலும் அதுதவறுதான், ஆனால் நம் முன் அனுமானம் என்னவெனில் டெக்னாலஜி எப்போதும் சரி என்பதே. அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் உண்மை. டெக்னாலஜி நம்மை பல விதங்களில் ஏமாற்றும் ஏமாற்றுகிறது.

    இந்நிலையில் நேற்று அவுட் ஆனவுடன் மேத்யூ வேட் அவுட் தீர்ப்பளிக்கப்பட்டவுடன் பெவிலியின் சென்று ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார், மட்டையை தூக்கி அடித்தார், இதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஹர்திக் பாண்டியாவுமே மேத்யூ வேடுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே உணர்கிறார்.

    பாண்டியா கூறும்போது, “அல்ட்ரா எட்ஜில் பேட்டில் பட்டது கொஞ்சம் தெரிந்தது. பெரிய திரையில் அது தெரியவில்லை. நாம் யாரையும் தவறு சொல்லவில்லை ,தொழில்நுட்பமே உதவவில்லை எனில் நாம் யாரைத்தான் குற்றம் சொல்ல முடியும்? நிச்சயமாக வேண்டுமென்றே தனிப்பட்ட முறையில் யாரும் தவறு செய்யப் போவதில்லை, தொழில்நுட்பம் கைவிட்டால் வேறு யார் உதவ முடியும்?

    பல சமயங்களில் நடுவர் முடிவு மாற்றப்பட்டு சரியான தீர்ப்புகளை தொழில்நுட்பம் வழங்கியுள்ளது” என்றார் ஹர்திக் பாண்டியா.

    ஏன் ஷமி, பெர்கூசனை நிறுத்தி வைத்தீர்கள் என்ற கேள்விக்கு, “திரும்பி பார்க்கையில் ஏன் இவர் வீசவில்லை, அவர் வீசவில்லை என்று கேட்கலாம். ஸ்லோயர் ஒன் வீசுபவர்கள் வீசினால் நல்லது என்று நினைத்தோம். களத்தில் அந்த சமயத்தில் எது சரி என்று தோன்றுகிறதோ அந்த முடிவை எடுக்கிறோம் சில வேளைகளில் கிளிக் ஆகும் சில வேளைகளில் தவறாகும்.

    ஆட்டத்தில் எப்போதும் இருந்தோம், ஆனால் மேக்ஸ்வெல் இறங்கி 18 பந்தில் 40 அடித்ததுதான் பிரச்சனையாகிவிட்டது. மற்றபடி இவர் வீசவில்லை, அவர் வீசவில்லை என்பதெல்லாம் பிரச்சனை இல்லை. அட்டவணையில் முதல் 2 இடங்களில் இருப்பது முக்கியம் அப்போதுதான் ஒரு போட்டியில் தோற்றாலும் இன்னொரு போட்டியில் வாய்ப்பு இருக்கும். எனவே இந்த சீசனைப் பொறுத்தவரை மகிழ்ச்சிதான், என்கிறார் பாண்டியா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hardik Pandya, IPL 2022

    அடுத்த செய்தி