ஐபிஎல் நடுவர்கள் மோசம்: பிசிசிஐ-யை கிண்டலடித்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்
ஐபிஎல் நடுவர்கள் மோசம்: பிசிசிஐ-யை கிண்டலடித்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்
நடுவர்கள்.
எங்க கிட்ட பயிற்சி பெற்ற நடுவர்கள் இருக்கிறார்கள் வேணும்னா அனுப்பட்டா? என்று ஐபிஎல் தொடரில் நடுவர்களின் தரம் படுமோசமாகப் போவதையடுத்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யை கிண்டலடித்து ட்வீட் போட்டுள்ளது வைரலாகி வருகிறது,
எங்க கிட்ட பயிற்சி பெற்ற நடுவர்கள் இருக்கிறார்கள் வேணும்னா அனுப்பட்டா? என்று ஐபிஎல் தொடரில் நடுவர்களின் தரம் படுமோசமாகப் போவதையடுத்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யை கிண்டலடித்து ட்வீட் போட்டுள்ளது வைரலாகி வருகிறது,
அன்று மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி போட்டியில் இருந்திருந்து ஒரு அரைசதம் அடித்துக் கொள்ளலாம் என்று கோலி 48 ரன்களில் ஆடிய போது அவருக்கு எல்,பி.தீர்ப்பு அளித்தனர், கோலி ரிவியூ செய்தார், அதில் பேட் முதலிலா, கால்காப்பு முதலிலா என்பது சரிவரத் தெரியவில்லை ஆகவே களநடுவர் கொடுத்த அவுட் தீர்ப்பு செல்லும் என்று 3வது நடுவர் தீர்ப்பளித்தது கோலி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த 2 போட்டிகளான டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா போட்டியிலும் சரி, இரவில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ போட்டியிலும் சரி நடுவர்கள் படுமோசமான பிழைகளைச் செய்தனர். நேரம் ஆக ஆக அவர்களுக்கும் தூக்கம் வரத்தானே செய்யும். சர்வதேச அளவிலேயே நடுவர்கள் தரம் தாழ்ந்து வரும்போது ஐபிஎல் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஐஸ்லாந்து வாரியத்தின் நக்கல் ட்வீட்:
It's not easy for on field umpires to detect inside edges or whether ball hit bat or pad first. But every TV umpire should be able to make the right call with the benefit of slow motion replays and technology like UltraEdge. @BCCI We have trained umpires ready to fly over.
இந்த நிலையில் விராட் கோலி அவுட் விவகாரத்தை வைத்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கிண்டலடித்துள்ளது. கூடவே இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் அது வாரியுள்ளது. இதுகுறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் போட்டுள்ள டிவீட்டில், பந்து இன்சைட் எட்ஜ் ஆ அல்லது முதலில் பந்து பட்டது பேட்டா அல்லது பேடா என்பதை கணிப்பது ஆன் பீல்ட் அம்பயர்களுக்கு எளிதானதல்ல. ஆனால் டிவி அம்பயர்கள் அதை சரியாக கணிக்க வேண்டியது முக்கியம். சரியான முடிவை எடுக்க வேண்டும். ஸ்லோமோஷன் இருக்கிறது, அல்ட்ரா எட்ஜ் டெக்னாலஜி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி முடிவெடுக்க வேண்டும். பிசிசிஐ - எங்களிடம் நன்கு பயிற்சி பெற்ற அம்பயர்கள் உள்ளனர். சொன்னால் உடனே கிளம்பி வருவார்கள் என்று நக்கலடித்துள்ளது.
ஆனால் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்தக் கருத்தை இந்திய ரசிகர்கள் ரசிக்கவில்லை, அவர்களுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.