Suresh Raina: நல்ல சமையல்காரனாக விரும்புகிறேன் - ‘மிஸ்டர் ஐபிஎல்’ சுரேஷ் ரெய்னா
Suresh Raina: நல்ல சமையல்காரனாக விரும்புகிறேன் - ‘மிஸ்டர் ஐபிஎல்’ சுரேஷ் ரெய்னா
suresh Raina
மிஸ்டர் ஐ.பி.எல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் இதனையடுத்து சின்ன தல என்று செல்லமாக சிஎஸ்கே ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்வி எழுப்பியது.
மிஸ்டர் ஐ.பி.எல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் இதனையடுத்து சின்ன தல என்று செல்லமாக சிஎஸ்கே ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்வி எழுப்பியது.
தோனி 40 வயதில் ஆடுவாராம், கேப்டனாம், ஆனால் 35 வயதாகும் ரெய்னாவுக்கு கல்தாவா என்று ரசிகர்களிடத்தில் கேள்வி பிறந்துள்ளது, ஆனால் தோனி கிரிக்கெட் வீரர் என்ற ஹோதாவையெல்லாம் கடந்து போய் இப்போது அவர் பைஜு, சாம்சங், பலவகை கார்கள் போன்று பிராண்ட் ஆகிவிட்டார், இனி ஐபிஎல் கிரிக்கெட்டில் பிராண்ட் ஆனால்தான் பிழைக்க முடியும். ரெய்னா எங்கிருந்து பிராண்ட் ஆவது? அவருக்கு தெரிந்ததெல்லாம் கிரிக்கெட் மட்டும்தான் பாவம்!
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ‘மிஸ்டர் ஐ.பி.எல்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. இடது கை ஆட்டக்காரரான அவருக்கு இப்போது 35 வயதாகிறது.
கடந்த 2 சீசன்களாக அவரது ஆட்டத்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் அவர் துபாயில் நடைபெற்ற 2020ம் ஆண்டு ஐ பி எல் தொடரில் பங்கேற்கவில்லை. அதன்பின் இந்த சர்ச்சை பூதகரமானது. அந்த தொடரில் சென்னை அணி லீக் சுற்றுடன் படுதோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து ரெய்னா இல்லாததே சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் கடந்த ஆண்டு ஐ பி எல் தொடரில் அவர் மீண்டும் பங்கேற்று சென்னை அணிக்காக விளையாடினார். எனினும் காயம் காரணமாக அவர் பெரும்பாலான போட்டிகளில் விளையாடவில்லை.
அவர் இதுவரை 205 ஐ பி எல் போட்டிகளில் விளையாடி 5528 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 1 சதம் உள்பட 39 அரைசதங்கள் அடங்கும். இதன்மூலம், ஐ பி எல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடக்த்துக்கு அளித்த பேட்டியில் அவரிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது, “நீங்கள் தமிழ்நாடு, உ.பி மற்றும் சென்னையில் பிரபலமான வீரர். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? அரசியலில் சேர்வீர்களா? என்று கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, “இல்லை, இல்லை! கிரிக்கெட் தான் என்னுடைய ஒரே காதல். கிரிக்கெட்டுடன் தான் இருப்பேன். இதுதான் எனக்குச் தெரிஞ்ச விளையாட்டு, அரசியல் எனக்கு தெரியாது. எனக்கு அரசியல் புரியாது. இப்போது நல்ல சமையல்காரர் ஆகவேண்டும் என்பதே விருப்பம். எந்த ஒரு சமையலையும் நன்றாகச் செய்கிறேன். எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன்” என்றார் ரெய்னா.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.