Home /News /sports /

15-வது மாடி பால்கனியில் தொங்கினேன், விடிய விடிய வாயில் டேப், கைகள் கட்டப்பட்ட நிலையில் .. - செஹல் பகிர்ந்த திக் திக் கணங்கள்

15-வது மாடி பால்கனியில் தொங்கினேன், விடிய விடிய வாயில் டேப், கைகள் கட்டப்பட்ட நிலையில் .. - செஹல் பகிர்ந்த திக் திக் கணங்கள்

செஹல் - சுந்தர்

செஹல் - சுந்தர்

மும்பை இந்தியன்ஸில் தொடங்கி ஆர்சிபியில் பல் ஆண்டுகள் ஆடி இப்போது ராஜஸ்தன் ராயல்ஸ் அணியில் ஆடி வரும் இந்திய லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர செஹல் தன் ஐபிஎல் வாழ்க்கையில் நடந்த சுவைமிகுந்த ஆனால் அதே வேளையில் அனுபவித்த த்ரில் திடுக் அனுபவங்களை அஸ்வினுடனான உரையாடலில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    மும்பை இந்தியன்ஸில் தொடங்கி ஆர்சிபியில் பல் ஆண்டுகள் ஆடி இப்போது ராஜஸ்தன் ராயல்ஸ் அணியில் ஆடி வரும் இந்திய லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர செஹல் தன் ஐபிஎல் வாழ்க்கையில் நடந்த சுவைமிகுந்த ஆனால் அதே வேளையில் அனுபவித்த த்ரில் திடுக் அனுபவங்களை அஸ்வினுடனான உரையாடலில் பகிர்ந்துள்ளார்.

    சக வீரர்களுடன் சகஜமாகப் பழகும் செஹலை செஸ் ஆட்டத்தில் வெல்ல முடியாது, அதே போல் நன்றாகக் குடிக்கவும் செய்வார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு கண்மண் தெரியாத ஒரு குடிக் கொண்டாட்டத்தைப் பற்றித்தன் செஹல் தற்போது பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தேன். பெங்களூருவில் நடந்த போட்டிகுப் பிறகு அங்கிருந்து புறப்படத் தயாரானோம். அப்போது சக வீரர் ஒருவர், அவர் பெயரை வெளியிட மாட்டேன், அவர் என்னை அழைத்தார், அவர் செம்ம டைட், நன்றாக குடித்திருந்தார். நானும் அப்பாவியாகச் செல்ல அப்படியே என்னை அலேக்காக தூக்கி பால்கனியில் தொங்க விட்டார்.

    அவரது கழுத்தை நான் நன்றாகக் கட்டிக் கொண்டிருந்தேன். ஒருவேளை நான் என் பிடியை நழுவ விட்டிருந்தால் அவ்வளவுதான் 15வது மாடியிலிருந்து கீழே விழுந்திருப்பேன். 15வது மாடி பால்கனியில் அவரது கைகளில் நான் தொங்கிக் கொண்டிருந்தேன். பிறகு அங்கிருந்தவர்கள் என்னை மீட்ட போது நான் மயக்கமடைந்து விட்டேன். இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பியது நினைத்தால் மெய் சிலிர்க்கிறது. சிறு தவறு செய்திருந்தாலும் அவ்வளவுதான் அதலபாதாளம்தான்.

    அதே போல் 2011-ல் மும்பை அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றிருந்தது, நாங்கள் சென்னையில் இருந்தோம். மிகப்பெரிய குடிகாரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அன்று அதிகம் ‘ஜூஸ்’ குடித்திருந்தார். அவரும் ஜேம்ஸ் பிராங்கிளின் என்ற வீரரும் என்ன போதையில் இருந்தனர் என்று தெரியவில்லை. என் கை கால்களை கட்டி விட்டு வாயில் டேப் ஒட்டி விட்டு பார்ட்டிக்குச் சென்றனர், என்னை மறந்து விட்டனர். இரவுமுழுதும் வாயில் டேப்புடன் அப்படியே கிடந்தேன். மறுநாள் அறையை சுத்தம் செய்ய வந்த நபர் என்னைப்பார்த்து அதிர்ந்தார். உடனடியாக என்னை மீட்டார்.

    ஆனால் இதற்காக சைமண்ட்ஸ், பிராங்க்ளின் என்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. மாறாக ஜூஸ் அதிகம் குடித்தால் இதெல்லாம் சகஜம் என்றனர், என்று தன் திக் திக் அனுபவங்களை ருசிகரமாகப் பகிர்ந்து கொண்டார் செஹல்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Mumbai Indians, Rajasthan Royals, Yuzvendra chahal

    அடுத்த செய்தி