Home /News /sports /

கால்பந்தாட்டத் திறனை வளர்த்துக் கொள்: சிஎஸ்கே டீன் ஏஜ் வீரருக்கு தோனி ஜாலி அட்வைஸ்

கால்பந்தாட்டத் திறனை வளர்த்துக் கொள்: சிஎஸ்கே டீன் ஏஜ் வீரருக்கு தோனி ஜாலி அட்வைஸ்

பயிற்சியில் சிஎஸ்கே

பயிற்சியில் சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் MS தோனி, U-19 உலகக் கோப்பை 2022 வென்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டர் - வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருடன், இந்தியா சிமெண்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் சந்திப்பில் தோனி ஜாலியாக பேசினார்.

மேலும் படிக்கவும் ...
    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் MS தோனி, U-19 உலகக் கோப்பை 2022 வென்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டர் - வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருடன், இந்தியா சிமெண்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் சந்திப்பில் தோனி ஜாலியாக பேசினார்.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் 2022 தொடரை கடந்த ஆண்டு இறுதிப்போட்டியாளரான கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு (கேகேஆர்) எதிராக மார்ச் 26 அன்று வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

    போட்டிக்கு முன்னதாக ஒரு மெய்நிகர் உரையாடலில், CSK இன் புதிய வீரர்களான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் சிவம் துபே ஆகியோர் அருகில் இருக்க MS தோனி ரசிகர்களுடன் உரையாடினார்.

    உரையாடலின் போது, ​​U-19 வீரர் ஹங்கர்கேகரிடம், இந்திய அணியின் ஜாம்பவான் கேப்டன் தோனி உடனான உரையாடல் குறித்து கேட்கப்பட்டது. ஆனால் ஹங்கர்கேகர் ரசிகர்களிடம் பதில் அளிக்கும் முன்பாக குறுக்கிட்ட தோனி வேடிக்கையாக ஒன்றைக் கூறினார். அதாவது, “இவரை தன் கால்பந்து திறமைகளை வளர்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறோம்’ என்றார்.

    பெங்களூரில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்தில் யு-19 உலகக் கோப்பை வென்ற வேகப்பந்து வீச்சாளர் ஹங்கர்கேக்கரை ரூ.1.5 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    Also read: நானும் 2 முச்சதங்கள் அடித்திருக்கிறேன்; யார் கொண்டாடுகிறார்கள்?: இன்னொரு கோலியின் சோகக் கதை

    அதன் பிறகு ஹங்கர்கேக்கர் கூறும்போது, “பயிற்சியின் முதல் நாள், எம்.எஸ். தோனி என்னிடம் நீங்கள் ஏற்கனவே என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே தொடர்ந்து செய்யுங்கள் என்று சொன்னார். எதையும் மாற்ற வேண்டாம். நீங்கள் சிறப்பாகச் செய்து வருவதைத் தொடர்ந்து செய்யுங்கள். இது எனக்கு ஒரு நல்ல அறிவுரையாக இருந்தது, நான் என்ன செய்கிறேனோ அதைச் செய்ய எனக்கு சுதந்திரம் உள்ளது.” என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dhoni, IPL 2022

    அடுத்த செய்தி