முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2022- ரஷீத் கான் விக்கெட்டுகளை வீழ்த்துபவர் அல்ல - லாராவின் பெரிய ஸ்டேட்மெண்ட்

IPL 2022- ரஷீத் கான் விக்கெட்டுகளை வீழ்த்துபவர் அல்ல - லாராவின் பெரிய ஸ்டேட்மெண்ட்

பிரையன் லாரா

பிரையன் லாரா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரையன் லாரா, கேன் வில்லியம்சன் படை பெரிய வெற்றிகளைப் பெற்று போட்டியில் தங்களையும் இணைத்துக் கொண்ட பிறகு ரஷித் கான் பற்றி தைரியமான அறிக்கையை வெளியிட்டார். . மெகா ஏலத்திற்கு முன்னதாக ரஷித் SRH ஆல் விடுவிக்கப்பட்டார். ஐபிஎல் 2022 க்காக குஜராத் டைட்டன்ஸ் அணியால் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் வாங்கப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனுடனான உரையாடலின் போது, ​​SRH பேட்டிங் பயிற்சியாளர் லாரா, ஹைதரபாத் அவரை விடுவித்தது குறித்து மனம் திறந்தார்.

“எனக்கு ரஷித் கான் மீது மிகுந்த மரியாதை உண்டு, ஆனால் எங்களிடம் சரியான பவுலிங் கூட்டணி இருப்பதாக நான் நம்புகிறேன். ரஷித் கான் பந்து வீச்சில் எதிரணிகள் தற்காப்பு உத்தியில் ஆடுகின்றனர், தடுத்தாடுகின்றனர். அவர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுபவர் அல்ல.

ஆம் ஒரு ஓவருக்கு 5.5-6 ரன்கள்தான் கொடுக்கிறார்கள் என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் முதல் ஆறு ஓவர்களில் இடது கை வீரர்களுக்கு பந்தை சுழற்ற வாஷிங்டன் சுந்தர் போன்ற ஒரு ஸ்பின்னர் இருக்கும்போது நமக்கு ஏன் கவலை? ​​அவர் ஒரு சொத்து என்று நினைக்கிறேன். காயம் காரணமாக அவருக்குப் பதிலாக சுசித் வந்துள்ளார், சுசித்தும் அருமையான பவுலர்.

இதுவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளோம். நிச்சயமாக, ஆடுகளங்கள் மாறலாம், பின்னர் அவை குறைவான புல்லைக் கொண்டிருக்கலாம். எங்களிடம் ஷ்ரேயாஸ் கோபாலும் இருக்கிறார், அவர் இதுவரை விளையாடவில்லை. ஐபிஎல்லில் ஹாட்ரிக் சாதனை படைத்தவர். எங்களிடம் நிறைய இன்னும் வீரர்கள் பலம் இருப்பதாகவே நினைக்கிறேன், நான் கவலைப்படவில்லை. ரஷித் கானுக்கு எல்லா மரியாதையும் உண்டு. அவர் இந்த அணியில் உறுப்பினராக இருந்திருந்தால், நாங்கள் 7க்கு 7 ஆக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.” இவ்வாறு கூறினார் லாரா.

First published:

Tags: Brian lara, IPL 2022, SRH