ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான
சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி தாங்கள் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் மிகவும் பின்னடைவை சந்தித்து உள்ளது. ஜடேஜா கேப்டன்சி செய்யவில்லை, தோனிதான் செய்கிறார் என்கிறார் ஹர்பஜன் சிங்.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:
" சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜாவிற்கு பொறுப்பு கிடைத்துவிட்டது. ஆனால் ஜடேஜா பீல்டிங் ரிங்கிற்கு வெளியில் நின்றுக்கொண்டிருக்கிறார். அங்கிருந்து ஒரு கேப்டனால் எந்தவொரு விஷயத்தையும் கையாள முடியாது.
இதனால் அவர் தோனிக்கு தான் தலைவலி கொடுக்கிறார். பீல்டிங் ரிங்கிற்கு உள்ளே நிற்கும் தோனி பீல்ட் செட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து பணிகளையும் செய்கிறார். ஒரு அணியின் சிறந்த ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்றால், ஜடேஜா பேசியாக வேண்டும்,
தன்னுடைய சுமையை தோனியின் தோள்களில் இறக்கி வைக்கிறார் ஜடேஜா, தோனிதான் இன்னும் கேப்டன்சி செய்து வருகிறார், பிறகு எதற்கு விலகுகிறேன் என்ற பெயரில் ஜடேஜாவுக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும்.
ஆனால் பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் ஜடேஜா நம்ப முடியாத திறன்களைக் கொண்டுள்ளார். ஆனால் வீரர்களிடமிருந்து ஆட்டத்திறனை வாங்குவது என்பது வேறு விஷயம், ஜடேஜா எழுந்து நின்று சில விஷயங்களைப் பேசியாக வேண்டும்.
பவுலிங் மோசமாக உள்ளது, பேட்டிங்கும் மேம்பாடு அடைய வேண்டும், தோனி ஆலோசனைகளை ஜடேஜாவுக்கு ஸ்பூனால் ஊட்டி விடுவதை நிறுத்த வேண்டும். ஜடேஜாவையே கேப்டன்சி செய்ய சொல்லி அவர் மேம்பாடு அடைய வழி விட வேண்டும். தோனி வழிகாட்டியாக இருக்கலாம் அவ்வளவே, அனைத்தையும் தோனியே பார்த்துக் கொள்கிறார் என்றால் எதற்கு இந்த கேப்டன்சி மாற்றம்? என்று ஹர்பஜன் சாடியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.