ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரஷீத் கான், தமிழக வீரர் சாய் கிஷோரிடம் லக்னோ 'சூப்பர் சரிவு'- பிளே ஆஃப் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ்

ரஷீத் கான், தமிழக வீரர் சாய் கிஷோரிடம் லக்னோ 'சூப்பர் சரிவு'- பிளே ஆஃப் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ்

ரஷீத் கான் அபார பவுலிங்

ரஷீத் கான் அபார பவுலிங்

புனேயில் நடைபெற்ற டாடா ஐபிஎல் 2022 தொடரின் 57வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் ஷுப்மன் கில்லின் பொறுப்பான ஆட்டத்தினால் 144 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரஷீத் கான், தமிழக இடது கை ஸ்பின்னர் சாய் கிஷோர் பந்து வீச்சில் 82 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைய குஜராத் டைட்டன்ஸ் தன் முதல் ஐபிஎல் தொடரிலேயே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியாகி விட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

புனேயில் நடைபெற்ற டாடா ஐபிஎல் 2022 தொடரின் 57வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் ஷுப்மன் கில்லின் பொறுப்பான ஆட்டத்தினால் 144 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரஷீத் கான், தமிழக இடது கை ஸ்பின்னர் சாய் கிஷோர் பந்து வீச்சில் 82 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைய குஜராத் டைட்டன்ஸ் தன் முதல் ஐபிஎல் தொடரிலேயே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியாகி விட்டது.

ஷுப்மன் கில் 49 பந்துகளில் 63 ரன்களை 7 பவுண்டரிகளுடன் அடித்து கடைசி வரை நின்றார் ஓப்பனிங்கில் இறங்கி நாட் அவுட், ஆனால் இவர் பொறுப்புடன் ஆடினாலும் ஸ்கோர் 144 என்பது போதாது என்று தெரிந்தும் ஏன் இத்தனை மந்தம் மற்றவர்களும் ஏன் அப்படி ஆடினார்கள் என்று புதிராய் கேள்வி எழுப்ப லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இன்னிங்ஸ் புதிராகச் சரிந்ததுதான் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்புகிறது.. ரஷீத் கானை இந்தத் தொடரில் எந்த பேட்டரும் அடிக்க முயற்சி செய்யவில்லை அவர் 4 ஓவர்களை முடித்து விட்டுப் போகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் ஆடினர்,. ஆனால் நேற்று ரஷீத் கானிடம் லக்னோ அவுட் ஆனது ஏன் இப்படி? என்ற கேள்வியை எழுப்பியது. அதே போல் ஷுப்மன் கில்லுக்கு ஆரம்பத்தில் கேட்ச் விடப்பட்டதும் சரியாகப் படவில்லை.

பவுலிங்கில் சிஎஸ்கேவினால் 3 சீசன்களுக்கு பெஞ்சில் அமரவைக்கப்பட்டு வீணடிக்கப்பட்ட தமிழ்நாடு வீரர், இடது கை ஸ்பின்னர் சாய் கிஷோர் குஜராத்தில் வந்து அறிமுக போட்டியில் ஆடுகிறார், அவருக்கு அது உணர்ச்சிகரமான தருணம் 2 ஓவர் 7 ரன் 2 விக்கெட் என்று அசத்தினார். சிஎஸ்கேவுக்கும் தமிழ்நாடு வீரர்களுக்கும் ஒட்டாது போலும். இவரும் ரஷீத் கானும் 31 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பவர் ப்ளேயில் 35/2 என்று மந்தமாகவே தொடங்கியது. கில் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டும், ஆனால் லக்னோவின் அறிமுக வீரர் கரண் சர்மா கடினமான கேட்சை விட்டு வாழ்வு கொடுத்தார். முதல் பந்திலேயே இடது கை வேகப்பந்து வீச்சாளர் மோசின் கானிடம் போயிருக்க வேண்டியது, இந்த ட்ராப்பிற்கு கொடுத்த விலைதான் தோல்வி. ஹர்திக் பாண்டியா 13 பந்துகள் ஆடி 10 ரன்கள் எடுத்து ஏன் அப்படி ஆடினார் என்று தெரியவில்லை கடைசியில் ஆவேஷ் கானின் எக்ஸ்ட்ரா பவுன்சில் எட்ஜ் ஆகி டி காக் கேட்சுக்கு வெளியேறி கடும் ஏமாற்றமடைந்தார்.

ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தே ஆடியது குஜராத் டைட்டன்ஸ், டேவிட் மில்லர் கவர் மேல் அடித்த சிக்ஸ்தான் ஒரே அட்டாக்கிங் ஷாட். குருனால் டைட்டாக வீசினார். சிங்கிள்களாக எடுத்தனர். மொத்தம் 61 சிங்கிள்கள் ஒரு டி20 போட்டி இன்னிங்சில் வந்தது என்றால் எத்தனை அறுவை என்பதை பார்த்துக் கொள்ளலாம். இதில் ஷுப்மன் கில் மட்டுமே 31 சிங்கிள்களை எடுத்துள்ளார்.

மில்லரும் கில்லும் சேர்ந்து 41 பந்தில் 52 எடுக்க ராகுல் திவேத்தியா 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் என்று தன் வழக்கமான சிறு அதிரடி இன்னிங்ஸை ஆடினார். தீபக் ஹூடாவுக்கு திவேத்தியா நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் கேட்சை விட்டார். இதெல்லாம் கடும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஜேசன் ஹோல்டர் கடைசி ஓவரில் 16 ரன்களைக் கொடுத்ததும் தான்.

லக்னோ சூப்பர் சரிவு: ரஷீத் கான், தமிழக ஸ்பின்னர் சாய் கிஷோர் அபாரம்!

145 ரன்கள் இலக்கை எதிர்த்து லக்னோ முதலிலேயே யாஷ் தயால் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளரிடம் குவிண்டன் டி காக், அறிமுக பேட்டர் கரன் சர்மாவை இழந்தது. முகம்மது ஷமி ஒரே ஏத்து ஏத்த கே.எல்.ராகுல் சற்றும் எதிர்பாராது வந்த ரைசிங் டெலிவரியை புல் ஆடுகிறேன் என்று கொடியேற்றி கேட்ச் ஆகி வெளியேறினார் பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகள் காலி.

44/3 என்று இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரஷீத் கான் வந்தவுடன் சரியத் தொடங்கியது. சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை 7 ரன்களுக்கும் ரஷீத் 4 விக்கெடுகளை 24 ரன்களுக்கும் எடுக்க 70/9 என்று ஆனது லக்ன. இதில் இரண்டு அருமையான ஸ்டம்பிங்குகளைச் செய்தார் விருத்திமான் சஹா. ஒன்று குருணால் பாண்டியா கூக்ளியில் ஏமாந்தார், இன்னொன்று சாய் கிஷோர் பந்துக்கு ஒரேயடியாக முன்னால் ஏறி வந்து ஆயுஷ் பதோனி ஸ்டம்ப்டு ஆனார்.

லக்னோவை வெற்றிக்கு இட்டுச் செல்ல மீதமிருப்பது ஹூடா, ஸ்டாய்னிஸ், ஜேசன் ஹோல்டர்தான், ஆனால் டேவிட் மில்லரின் த்ரோவுக்கு ஸ்டாய்னிஸ் ரன் அவுட் ஆனார். அங்கு 2வது ரன் இல்லை. ஹோல்டர் ரஷீத் கான் பந்தில் நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ரஷீத் பந்தில் டாப் எட்ஜ் ஆகி ஹூடா வெளியேறினார். ஆவேஷ் இறங்கி 2 சிக்சர்களை அடித்தார். இதனால் ரஷீத் கானின் ஸ்பெல்லும் 24 ரன்கள் என்று ஆனது. லக்னோ 13.5 ஓவர்களில் 82 ஆல் அவுட்.

First published:

Tags: Gujarat Titans, IPL 2022, Lucknow Super Giants, Rashid Khan, Shubman Gill