Home /News /sports /

தனியாளாக மாஸ் காட்டிய மில்லர்: பேட்டிங்கிலும் கலக்கிய ரஷித்கான்- சென்னையை வீழ்த்திய குஜராத்

தனியாளாக மாஸ் காட்டிய மில்லர்: பேட்டிங்கிலும் கலக்கிய ரஷித்கான்- சென்னையை வீழ்த்திய குஜராத்

ரஷித் கான், மில்லர்

ரஷித் கான், மில்லர்

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 29-வது போட்டியில் சென்னை அணியும், குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா களமிறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய உத்தப்பா இந்தப் போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து, ரூத்ராஜ், அம்பதி ராயுடு இணை ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 32 ரன்களில் 2 விக்கெட்களை இழந்த நிலையில், இந்த இணை 92 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ராயுடு 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ரூத்ராஜ் 48 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ஷிவம் துபே, ஜடேஜா இணை அதிரடியாக ரன்களைக் குவிக்க சிரமப்பட்டனர்.

    17 பந்துகளை எதிர்கொண்ட துபே 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். மறுபுறம் ஜடேஜா 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள் அடித்தார். இறுதி ஓவர்களில் அதிரடியாக ரன்கள் சேர்க்க வீரர்கள் தடுமாறியதால் ரன்ரேட் வெகுவாகக் குறைந்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 169 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் அணி சார்பில் அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அதனையடுத்து, களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விரித்திமான் சஹா, ஷப்மன் கில் களமறிங்கினர். கில் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, விஜய் சங்கரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து சஹா 11 ரன்களிலும், அபினவ் மனோகர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 48 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத் டைட்ன்ஸ்.

    ஆட்டம் கிட்டத்தட்ட சென்னை அணியின் கைகளுக்கு சென்றிருந்தது. ஆனால், மறுபுறம் மில்லர் மட்டும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார். அப்போது களமிறங்கிய திவாட்டியாவும் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 12.4 ஓவரில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத். அப்போது மில்லருடன் ஜோடி சேர்ந்தார் ரஷித் கான். இருவரும் நம்பிக்கையுடன் விளையாடினர். 18 ஓவரில் அதிரடியைக் காட்டி அணியின் போக்கை மாற்றினார் ரஷித் கான். 2 சிக்ஸ்ர்கள், ஒரு பவுண்டரியை விளாசினார். 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ப்ராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் மில்லர் அதிரடியைக் காட்டிவந்தார்.

    ரூத்ராஜ் அதிரடி: இறுதி ஓவர்களில் ரன்கள் சேர்க்க தடுமாறிய வீரர்கள்- 169 ரன்கள் எடுத்த சென்னை அணி

    இறுதி ஓவரையும் ஜோர்டான் வீசினார். இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டு பந்துகள் ரன் ஏதும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடித்தார் மில்லர். அடுத்த பந்தை ஜோர்டன் நோபாலாக வீசினார். அதற்கு ப்ரி ஹிட் கிடைத்த நிலையில் அதில் பவுண்டரி விளாசினார். இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் மில்லர்.

    இறுதிவரை களத்தில் நின்ற அவர் 51 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CSK, IPL 2022

    அடுத்த செய்தி