Home /News /sports /

IPL 2022 GT vs MI-குஜராத் டைட்டன்ஸ் தோல்வி தொடருமா?- பாடம் புகட்ட மும்பை ரெடி

IPL 2022 GT vs MI-குஜராத் டைட்டன்ஸ் தோல்வி தொடருமா?- பாடம் புகட்ட மும்பை ரெடி

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் 8 வெற்றிகள் 2 தோல்விகளுடன் 16 புள்ளிகளுடன் ஆரோக்கியமாக முதலிடத்தில் உள்ளது, இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. மாறாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இழக்க ஒன்றுமில்லை, ஆனால் அதன் இந்தத் தன்மைதான் அந்த அணியை அபாயகரமான அணியாக்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
    குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் 8 வெற்றிகள் 2 தோல்விகளுடன் 16 புள்ளிகளுடன் ஆரோக்கியமாக முதலிடத்தில் உள்ளது, இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. மாறாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இழக்க ஒன்றுமில்லை, ஆனால் அதன் இந்தத் தன்மைதான் அந்த அணியை அபாயகரமான அணியாக்கியுள்ளது.

    மேலும் குஜராத் அணியும் தன் உடைந்து நொறுங்கும் பலவீன ஓட்டைகளை திறந்து காட்டியுள்ளது. ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில் பார்ம் சரியில்லை, சேசிங்கில் மில்லர், திவேத்தியா ஆட்டத்தின் மூலம் ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறது. பவுலிங்கில் ஷமி கலக்குகிறார். மும்பை இண்டியன்ஸ் அணியில் புதிதாக அறிமுகமான இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குமார் கார்த்திகேயா சிங் ஒரு அபாயகரமான பவுலர் என்பதற்கான சுவடுகளை அன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராகக் காட்டினார்.

    சஞ்சு சாம்சன் விக்கெட்டோடு 4 ஓவரில் 19 ரன்கள்தான் கொடுத்தார் குமார் கார்த்திகேயா சிங். இன்று குஜராத்துக்கு ஆப்பு வைத்தால் இவர்தான் வைப்பார், கடந்த தொடரிலும் மும்பை வெளியேறிய பிறகு ஒரு பேயாட்டம் ஆடியது, அப்படி ஆடி விட்டால் குஜராத்துக்கு நாம் கணித்த தொடர் தோல்விகள் சாத்தியத்தின் 3ம் புள்ளியில் இருக்கும் என்று கூறலாம்.

    இந்நிலையில் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 51-வது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன, புள்ளி பட்டியலில் 8 வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும்.

    அதே நேரத்தில் 9 போட்டிகளில் 8 தோல்வியின் மூலம் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பாதையை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.

    உத்தேச லெவன்:

    மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (WK), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டெவால்ட் ப்ரீவிஸ் அல்லது டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், ஹிருத்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரைலி மெரிடித்.

    குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில், விருத்திமான் சஹா, சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், பிரதீப் சங்வான் அல்லது யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது ஷமி
    Published by:Muthukumar
    First published:

    Tags: Gujarat Titans, IPL 2022, Mumbai Indians

    அடுத்த செய்தி