Home /News /sports /

IPL 2022: குஜராத் டைட்டன்சுக்கு வருகிறார் 20 வயது ஆப்கான் அதிரடி மன்னன்- இதுவே இவரது முதல் ஐபிஎல்

IPL 2022: குஜராத் டைட்டன்சுக்கு வருகிறார் 20 வயது ஆப்கான் அதிரடி மன்னன்- இதுவே இவரது முதல் ஐபிஎல்

20 வயது ஆப்கான் அதிரடி மன்னன் குர்பாஸ்

20 வயது ஆப்கான் அதிரடி மன்னன் குர்பாஸ்

ஐபிஎல் 2022 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அதிரடி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

    ஐபிஎல் 2022 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அதிரடி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

    பிப்ரவரியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போன குர்பாஸ், ஒரு சீசனுக்கான அவரது அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு (சுமார் $66,000) எடுக்கப்பட்டார். 20 வயதான அவருக்கு இது முதல் ஐபிஎல் தொடராகும். அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல்லில் ஆடவுள்ளது. பாண்டியாவின் கேப்டன்சி அனுபவம் சந்தேகத்துக்குரியதே.

    பயிற்சியாளர்களாக ஆஷிஸ் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் ஆகியோர் உள்ளனர். ஏலத்தில் ஜேசன் ராய், மேத்யூ வேட், டேவிட் மில்லர், லாக்கி ஃபெர்குசன், அல்ஸாரி ஜோசஃப் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களையும், விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ஜெயந்த் யாதவ், ஆகிய இந்திய ஆல்ரவுண்டர்கள் மற்றும் வருண் ஆரோன், முகமது ஷமி, ரிதிமான் சஹா ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

    குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருந்தாலும், டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு மாற்று வீரர்களே இல்லாத அளவிற்கு வெறும் ஷுப்மன் கில் மற்றும் ஜேசன் ராய் ஆகிய 2 வீரர்களை மட்டுமே எடுத்து வைத்திருந்த நிலையில், 2 மாத காலம் கொரோனா பாதுகாப்பு வலையத்தில் இருக்கமுடியாது என்று கூறி ஜேசன் ராய் ஐபிஎல்லில் இருந்து விலகினார்.

    குர்பாஸ் ஆப்கானிஸ்தான் ஜோடியான ரஷித் கான் மற்றும் நூர் அகமதுவுடன் டைட்டன்ஸில் இணைவார். ஏலத்திற்கு முந்தியே ரஷித் வாங்கப்பட்ட நிலையில், சமீபத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இடம்பெற்ற நூர் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

    ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான ரஹ்மானுல்லா குர்பாஸ், 20 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 534 ரன்கள் அடித்துள்ளார். இவர் பெரிய அனுபவம் இல்லாதவர் என்றாலும், அதிரடியாக ஆடக்கூடிய திறமை இவரிடம் உண்டு, ஆரம்ப கால இலங்கை பேட்ஸ்மென்கள் போல் பந்தை தூக்கி அடித்து விரட்டும் திறமை இவரிடம் இருப்பதை பார்க்க முடிகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷுப்மன் கில்லுடன் அநேகமாக ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் இறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Gujarat, Gujarat Titans, IPL 2022

    அடுத்த செய்தி