Home /News /sports /

டெத் ஓவர்களில் மிரட்டிய திவாட்டியா, ரஷித் கான்- இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் அணி

டெத் ஓவர்களில் மிரட்டிய திவாட்டியா, ரஷித் கான்- இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் அணி

குஜராத் வீரர்

குஜராத் வீரர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரானப் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 40-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, வில்லியம்சன் களமிறங்கினர். வில்லியம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியை அபிஷேக் சர்மா, மர்க்ரம் இணை சிறப்பாக ஆடி மீட்டெடுத்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய மார்க்ரமும் 56 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 195 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விரித்திமான் சஹா, ஷப்மன் கில் களமிறங்கினர்.

    கில் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லரும் 17 ரன்களில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய விரித்திமான் சஹா 38 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். 16 ஓவரில் 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது குஜராத் அணி. அப்போது 24 பந்துகளுக்கு 55 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழலில் திவாட்டியா, ரஷித்கான் இணை ஜோடி சேர்ந்தது. இருவரும் தடுமாற்றமே இல்லாமல் ஹைதராபாத் அணி வீரர்களில் பந்துகளில் சிதறடித்தனர்.

    நடராஜன் வீசிய 19-வது ஓவரில் திவாட்டியா 2 சிக்ஸர்களை விளாசினார். இறுதி ஓவரில் 22 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழலில் மேக்ரோ ஜேன்சென் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட திவாட்டியா சிக்ஸ் அடித்து அசத்தினார். அடுத்த பந்தில் திவாட்டிய சிங்கிள் எடுக்க ஸ்டிரைக்குக்கு ரஷித்கான் வந்தார். அவர் 3-வது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து அசத்தினார்.

    4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. கடைசி இரண்டு பந்தில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. இறுதி இரண்டு பந்துகளிலும் சிக்ஸ் அடித்து குஜராத் அணியின் வெற்றியை உறுதி செய்தார் ரஷித்கான். டெத் ஓவர்களில் திவாட்டியா, ரஷித் கான் இணை ஒரு மிரட்டு மிரட்டி எடுத்தது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL

    அடுத்த செய்தி