இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2022) 2022 சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் அடங்கிய ஹர்திக் பாண்டியா படைக்கு நேற்று குஜராத் வீதிகளில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நகரத் தெருக்களில் டைட்டன்ஸ் ரசிகர்கள் கூடி திறந்த பேருந்தில் வந்த சாம்பியன் அணியை வரவேற்றனர்.
உஸ்மான்புரா ரிவர் ஃப்ரண்ட்டிலிருந்து தொடங்கிய ஓபன் பஸ் பேரணி விஸ்வகுஞ்ச் ரிவர் ஃபிரண்ட்டில் முடிந்தது. சாம்பியன் வீரர்கள் மற்றும் அணியினரை குஜராத் மாநில முதல்வர் புபேந்திரபாய் படேல் உபசரித்தார்.
சமூக ஊடகங்களில் இந்த பேரணியின் சிலபல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் சமூக ஊடகப்பக்கத்தில் அணிக்கு மக்கள் அளித்த உற்சாகம் முதல்வர் அளித்த வரவேற்பு என போட்டோக்களை அதகளப்படுத்தியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில், விருத்திமான் சஹா இந்த உபசரிப்பின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.