Home /News /sports /

பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்: 162 ரன்கள் எடுத்த குஜராத் அணி

பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்: 162 ரன்கள் எடுத்த குஜராத் அணி

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல் தொடரின் 21-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட், ஷப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ஷப்மன் கில் 7 ரன்களில் புவனேஷ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, மேத்யூ வேட்டும் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சாய் சுதர்ஸன் 11 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தார். ஹர்திக் அபினவ் மனோகர் இணை நிலைத்து ஆடி அரைசதம் கடந்தது. சிறப்பாக ஆடிய அபினவ் மனோகர் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் கொடுத்த இரண்டு கேட்ச்களை ஹைதராபாத் வீரர்கள் தவறவிட்ட நிலையில் மூன்றாவது முறையாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுபுறம் நிதானமாக ஆடிய ஹர்திக் பாண்டியா தனது ஐந்தாவது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர், நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி